UNDP India: இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 41 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டனர்: ஐ.நா. அறிக்கை

By Pothy Raj  |  First Published Oct 18, 2022, 9:50 AM IST

இந்தியாவில் இருந்து  கடந்த 2015-16ம் ஆண்டோடு ஒப்பிடுகையில்  2019-2021 ஆண்டில் ஏழ்மையிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 41.50 கோடியாக அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகளின் சபையின் மேம்பாட்டுத் திட்டம்(யுஎன்டிபி) அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் இருந்து  கடந்த 2015-16ம் ஆண்டோடு ஒப்பிடுகையில்  2019-2021 ஆண்டில் ஏழ்மையிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 41.50 கோடியாக அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகளின் சபையின் மேம்பாட்டுத் திட்டம்(யுஎன்டிபி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐநா மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் வறுமை மற்றும்  மனிதவள மேம்பாட்டுத் திட்டமும் இணைந்து புதிய வறுமை  குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

Tap to resize

Latest Videos

வருஷத்துக்கு 2 சிலிண்டர்கள் இலவசம்... மக்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்த குஜராத் அரசு!!

உலகில் 111 நாடுகளில் 120 கோடி மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். இதில் 59.30 கோடிபேர் 18வயதுக்கு உட்பட்ட பிரிவினர். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2015-16ம் ஆண்டில் இருந்து 2020-2021ம் ஆண்டுகளில் ஏழ்மையில் இருந்து 41.50 கோடி பேர் விடுபட்டுள்ளனர். 

2005-2006ம் ஆண்டில் இருந்து 2015-2016ம் ஆண்டுவரை 27.50 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 2015-16ம் ஆண்டிலிருந்து, 2020-2021ம் ஆண்டுவரை 14கோடி மக்களும் ஏழ்மையிலிருந்து விடுபட்டுள்ளனர். 

2015-16 முதல் 2019-2021 ஆண்டுவரை அதாவது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்  ஏழ்மை இந்தியாவில் வேகமாக அதாவது 11.9 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த, இது 2005-2006 முதல் 2015-2016ம் ஆண்டுகளில் 8.1 சதவீதமாகத்தான் இருந்தது. 

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்... குடியரசு தலைவர் ஒப்புதல்!!

2030ம் ஆண்டுக்குள்  இந்தியாவில் வறுமையில்வாடும் ஆண்கள்,  பெண்கள் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. ஏழ்மையிலிருந்து மீள்வோர் வேகம் இதேபோல் சென்றால் இலக்கு சாத்தியமாகும். இருப்பினும் 2020ம் ஆண்டு கணக்கின்படி உலகிலேயே அதிகமான ஏழைகள் வாழ்வது இந்தியாவில்தான். இங்கு 22.89 கோடி ஏழைகள் வாழ்கிறார்கள். 

உலகிலேயே அதிகமான ஏழைக் குழந்தைகள் வாழ்வதும் இந்தியாவில்தான். இங்கு 9.70 கோடி குழந்தைகள் வசிக்கிறார்கள். இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 5-ல் ஒரு குழந்தை ஏழ்மை நிலையில் இருக்கிறது. 
பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், காஷ்மீர், ஆந்திரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளில் வறுமை குறைந்துள்ளது.  பீகார் மாநிலத்தில் 2005-2006ல் ஏழ்மை 77 சதவீதமாக இருந்த நிலையில் 2015-16ல் 52.4 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 2019-2021ம் ஆண்டில் இது 34.7 சதவீதமாகக் சரிந்தது. 

நடிகர் சல்மான் கான் போதைமருந்து அடிமை, ஷாருக்கான்...! யோகா குரு ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு

இருப்பினும் பீகார், ஜார்க்கண்ட், மேகாலயா, மத்தியப்பிரதேசம், உ.பி., அசாம், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்னும் அதிகளவில் ஏழை மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் முழுமையாக ஏழ்மையிலிருந்து மீளவில்லை

இந்தியாவில் கிராமப்புறங்களில்தான் ஏழ்மை நகர்ப்பகுதிகளோடு ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது.  ஆண்கள் தலைமை ஏற்று செயல்படும் குடும்பங்களில் வறுமை,ஏழ்மை குறைவாகவும், பெண்கள் நிர்வாகம் செய்யும் குடும்பங்களில் ஏழ்மை அதிகரித்துள்ளது.

உலக வங்கி கணக்கின்படி, இந்தியாவில் ஏழ்மை வேகமாகக் குறைந்துவந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக, 5.60 கோடிபேர் திடீரென ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர். இது உலகளவில் 7.10 கோடியாக அதிகரி்த்துள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

click me!