வருஷத்துக்கு 2 சிலிண்டர்கள் இலவசம்... மக்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்த குஜராத் அரசு!!

By Narendran S  |  First Published Oct 17, 2022, 11:28 PM IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் மக்களுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. 


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் மக்களுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவரது அரசில் கல்வி அமைச்சராக உள்ள ஜித்து வகானி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். இதனால், குடிமகன்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 கோடி நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிங்க: மக்களை தான் சந்திக்கிறேன் தீவிரவாதிகளை அல்ல!- தமிழிசை சௌந்தரராஜன்!

Tap to resize

Latest Videos

38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதனால், ரூ.1,700 கோடி பணம் ஒட்டுமொத்த பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதேபோன்று, சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை வாயு மற்றும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை வாயு (பி.என்.ஜி.) ஆகியவற்றுக்கு 10 சதவீத வாட் வரியையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்... குடியரசு தலைவர் ஒப்புதல்!!

சிஎன்ஜி மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி அல்லது வாட் வரியை 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்தது. இதனால் சிஎன்ஜியை ஒரு கிலோவுக்கு ரூ. 7 குறைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் 14 லட்சம் வாகன் உரிமையாளர்கள் பயன்பெறுவர். வாட் வரி குறைப்பால் அரசுக்கு ரூ.1,650 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குஜராத் மக்களுக்கான தீபாவளி பரிசு என மாநில கல்வி அமைச்சரும், குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி தெரிவித்துள்ளார். 

click me!