அர்னால்டு டிக்ஸ் யார்? சுரங்கத் தொழிலாளர்களை மீட்க ஆஸ்திரேலிய நிபுணர் செய்தது என்ன?

By SG Balan  |  First Published Nov 29, 2023, 6:02 PM IST

17 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த மீட்புப் பணிகளில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் அயராது உழைத்திருக்கிறார். தொழிலாளர்களை மீட்டதில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.


உத்தரப் பிரதேச மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதனால் 41 சுரங்கத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பல்வேறு மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கி அவர்களை வெளியே அழைத்துவரும் முயற்சியில் இறங்கின.

கடுமையான போராட்டத்துக்குப் பின் சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நவம்பர் 28ஆம் தேதி  மாலை மீட்கப்பட்டனர். 17 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த மீட்புப் பணிகளில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் அயராது உழைத்திருக்கிறார். தொழிலாளர்களை மீட்டதில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

Tap to resize

Latest Videos

சில்க்யாரா சுரங்கத் தொழிலாளர்களுடன் போனில் பேசி நலம் விசாரித்த பிரதமர் மோடி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கப்பாதை நிபுணரான அர்னால்ட் டிக்ஸ், கிறிஸ்துமஸுக்கு முன் 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்று உறுதியளித்தார். மீட்புக் குழுக்கள் பணியின்போது பல சிரமங்களை எதிர்கொண்டனர். ஆனால் மனம் தளராமல் முயற்சியைத் தொடர்ந்தனர். இறுதியாக, அர்னால்ட் உறுதியளித்தபடி, தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்துவரப்பட்டனர்.

Faith is powerful. Thank the almighty. Must watch this interview of Australian Tunnelling expert camping at Uttarakhand by an Indian journalist in Uttarkashi hours before the 41 workers were rescued after more than two weeks of being trapped. Great orator. 👏 pic.twitter.com/pvUL0ZIpfs

— Aditya Raj Kaul (@AdityaRajKaul)

தொழிலாளர்கள் வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்லான்ட், "நினைவிருக்கிறதா? நான் 41 பேரும்  எந்த பாதிப்பும் இல்லாமல் கிறிஸ்துமஸுக்கு முன் வீட்டில் இருப்பார்கள் என்று சொன்னேன். விரைவில் கிறிஸ்துமஸ் வரப்போகிறது. நாங்கள் ஒரு அற்புதமான குழுவாக வேலை செய்தோம். இந்த வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.

இதனிடையே, தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக அர்னால்ட் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. "மீட்புப் பணி வெற்றிகரமாக நடந்ததற்கு நன்றி சொல்வதற்காக நான் கோவிலுக்குச் சென்றதாகவும்" அர்னால்ட் கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம்! சில்கியாராவில் கோயில்! உத்தராகண்ட் முதல்வர் அறிவிப்பு!

மீட்புப் பணிகளின்போது அர்னால்ட் டிக்ஸ் மேற்கொண்ட தொடர்ச்சியான மற்றும் அயராத முயற்சிகளுக்கு இந்தியர்கள் இப்போது நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், இந்தியத் தொழிலாளர்களை மீட்க அர்னால்ட் ஆற்றிய பணிக்காக அவரைப் பாராட்டியுள்ளார்.

When science and technology meets faith. International tunnelling expert, Arnold Dix joins a priest in praying for the safe evacuation of 41 workers trapped inside the Silkyara tunnel, in Uttarakhand. pic.twitter.com/fhOBF0OCVh

— Amit Malviya (@amitmalviya)

அர்னால்ட் சர்வதேச சுரங்கப்பாதை சங்கத்தின் தலைவராக உள்ளார். இது மட்டுமல்ல, அர்னால்ட் ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானியும் பொறியியல் பேராசிரியரும் ஆவார். அர்னால்ட் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.

சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையை ஒரு மகத்தான சாதனை என்று கூறி, இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் தூதர் பிலிப் கிரீன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். "களத்தில் நின்று முக்கியமான தொழில்நுட்ப ஆதரவை வழங்கிய ஆஸ்திரேலியாவின் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ்க்கு சிறப்புப் பாராட்டு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவங்கதான் உண்மையான ஹீரோஸ்! மீட்புக் குழுவினரை கட்டித்தழுவி நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!