இந்தியா பிரிவினையில் பிரிந்த இஸ்லாமிய சகோதரி.. 75 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சீக்கியர் - நெகிழ்ச்சி சம்பவம்!

By Raghupati R  |  First Published Sep 10, 2022, 6:50 PM IST

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பிரிந்த சகோதரியை சீக்கிய சகோதரர் ஒருவர் தற்போது சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, குடும்பத்தை பிரிந்த அமர்ஜித் சிங் என்பவர், 75 ஆண்டுகளுக்கு பிறகு தனது சகோதரியை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சார்ந்த அமர்ஜித் சிங் என்பவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது தனது குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, அவரது பெற்றோர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். இஸ்லாமிய மதத்தை சார்ந்த அவரது பெற்றோர் 1947 ஆம் ஆண்டு தங்கள் இரு குழந்தைகளை ஜலந்தரில் விட்டுவிட்டு, ஜலந்தரில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்துள்ளனர். பிறகு  சிங் மற்றும் அவரது சகோதரியை ஒரு சீக்கிய குடும்பம் தத்தெடுத்து வளர்த்தது. இஸ்லாமிய மதத்தை சார்ந்த அவர்கள் இருவரும் சீக்கிய மதத்துக்கு மாறினர். சிங்கின் பெற்றோருக்கு பாகிஸ்தானில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

அவர் தான் சிங்கின் இளைய சகோதரி குல்சூம். குல்சூம் பாகிஸ்தானில் பிறந்தாலும், தனது இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு  அவரது தந்தை நண்பர் சர்தார் தாரா சிங் என்பவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்து அவரை சந்தித்தார். அப்போது சர்தார் தாரா சிங்கிடம், குல்சூமின் தாய் இந்தியாவில் விட்டுச் சென்ற தனது மகன் மற்றும் மகளைப் பற்றி கூறியுள்ளார். அவர்களின் கிராமத்தின் பெயரையும் அவர்கள் வீட்டின் இருப்பிடத்தையும் கூறியுள்ளார்.

பின்னர் சர்தார் தாரா சிங், படவான் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றார். அவர்களது மகன் உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அவரது மகள் இறந்துவிட்டதாகவும் சர்தார் தாரா சிங் தெரிவித்தார். சகோதரரின் தகவலைப் பெற்ற பிறகு, குல்சூம் சிங்குடன் வாட்ஸ் அப்பில் சிங்கை தொடர்பு கொண்டுள்ளார். பிறகு அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். 

மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

65 வயதான குல்சூம், தனது சொந்த ஊரான பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் இருந்து தனது மகன் ஷாஜாத் அகமது மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் தனது சகோதரனை சந்திக்க சென்றுள்ளார்.பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் அவர்கள் சந்தித்தனர். சிங்கைப் பார்த்த பிறகு குல்சூமால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே இருந்தனர். சிங் தனது உண்மையான பெற்றோர் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அவர்கள் முஸ்லீம்கள் என்பதை முதலில் அறிந்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும், தனது சொந்த குடும்பத்தைத் தவிர பல குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பிரிந்து கிடப்பதை அவர் கூறினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

click me!