rahul gandhi: amit shah: bjp: வரலாற்றை முதலில் படிங்க ராகுல் காந்தி : அமித் ஷா தாக்கு

By Pothy RajFirst Published Sep 10, 2022, 5:10 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் முன் நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் முன் நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியுள்ளார். ஏறக்குறைய 150 நாட்கள் செல்லும் யாத்திரையில் 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து ராகுல்காந்தி 3,570 கி.மீ தொலைவு நடைபயணம் மேற்கொள்ளவார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த யாத்திரை நடக்கிறது.

தேசமே பாருங்க! ராகுல் காந்தி அணியும் 41,000 ரூபாய் மதிப்புள்ள T-shirt: விளாசும் பாஜக

ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான காங்கிரஸ்தொண்டர்கள், நிர்வாகிகள், பங்கேற்கிறார்கள். இதில் ராகுல் காந்தியுடன் 230க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கடைசி வரை செல்கிறார்கள்.

ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி ஷர்ட் குறித்து படம் வெளியிட்டு பாஜக ட்விட்டரில் விமர்சித்தது. இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் ரூ.10 லட்சம் சூட் மற்றும் ரூ.1.50 லட்சம் கண்ணாடியை விமர்சிக்கவா என்று கேட்டது. 

சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிக்கை

இந்நிலையில் ராஜஸ்தானுக்கு பாஜக மூத்த தலைவர் அமித் ஷா சென்றுள்ளார். ஜெய்ப்பூரில் இன்று நடந்த பாஜக  கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் முன் நாட்டின் வரலாற்றை முழுமையாக முதலில் படிக்க வேண்டும். பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரை வைத்துக்கொண்டு, வெளிநாட்டு ஆடைகளையும், டிஷர்ட்டையும் ராகுல் காந்தி அணிந்து செல்கிறார். 

ராகுல் பாபா மற்றும் காங்கிரஸார் நாடாளுமன்றத்தில் பேசியதை நினைவுபடுத்துகிறேன். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்தார். எந்த புத்தகத்தில் இதைப் படித்தார் எனக் கூறமுடியுமா. லட்சக்கணக்கான மக்கள் உயிரைத் தியாகம் செய்த தேசம். 

‘தெருநாய் யாரையேனும் கடித்தால், அதற்கு உணவு கொடுப்பவர்களே பொறுப்பு’: உச்ச நீதிமன்றம் கருத்து

பாரதத்தை இணைக்கும் முயற்சியில் ராகுல் காந்தி செல்கிறார். ஆனால், அதற்கு முன்பாக அவர் இந்திய வரலாற்றைப் படிப்பது அவசியம். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பணியாற்ற முடியாது. திருப்திபடுத்துவதற்காக மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் பணியாற்ற முடியும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
 

click me!