burberry: rahul gandhi: தேசமே பாருங்க! ராகுல் காந்தி அணியும் 41,000 ரூபாய் மதிப்புள்ள T-shirt: விளாசும் பாஜக

By Pothy RajFirst Published Sep 10, 2022, 4:41 PM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள டி-ஷர்ட் அணிந்துள்ளது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள டி-ஷர்ட் அணிந்துள்ளது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியுள்ளார். ஏறக்குறைய 150 நாட்கள் செல்லும் யாத்திரையில் 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து ராகுல்காந்தி 3,570 கி.மீ தொலைவு நடைபயணம் மேற்கொள்ளவார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த யாத்திரை நடக்கிறது.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிக்கை

ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான காங்கிரஸ்தொண்டர்கள், நிர்வாகிகள், பங்கேற்கிறார்கள். இதில் ராகுல் காந்தியுடன் 230க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கடைசி வரை செல்கிறார்கள்.

இந்நிலையில் ராகுல் காந்தி அணிந்திருக்கும் வெள்ளை நிற டிஷார்ட் மற்றும் மற்றொரு வெள்ளை நிற டிஷர்ட் படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு பாஜக விமர்சித்துள்ளது. 

 

Bharat, dekho! pic.twitter.com/UzBy6LL1pH

— BJP (@BJP4India)

 

காரின் பின் சீட்டிலும் ‘சீட் பெல்ட் அலாரம்’ கொண்டுவரப்படும்: நிதின் கட்கரி தகவல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அணிந்துள்ளது பர்பெரி நிறுவனத்தின் டி-ஷர்ட்டாகும். இதன் விலை ரூ.41,257 என்று அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேசமே பாருங்கள்” என்ற வாசகத்துடன் ராகுல் காந்தி டி ஷர்ட் அணிந்திருக்கும் படத்தையும், அதன் அருகே மற்றொரு டிஷர்ட் படத்தையும் பதிவிட்டு பாஜக விமர்சித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாரத் ஜோடோ யாத்திரைக்கு வந்துள்ள கூட்டத்தைப் பார்த்து ஏன் அச்சப்படுகிறீர்கள். வேலையின்மை, பணவீக்கத்தைப் பற்றி பேசுங்கள். ஆடைகளைப் பற்றி பேசுவென்றால், நாங்கள் மோடியின் ரூ.10  லட்சம் மதிப்புள்ள ஆடையையும், அவர் அணியும்  ரூ.1.5 லட்சம் கண்ணாடியையும் பேச வேண்டியதிருக்கும்.சொல்லுங்கள் என்ன செய்யலாம்” எனக் கேட்கப்பட்டுள்ளது.

42 % இளைஞர்களுக்கு வேலை இல்லை.. அவர்களுக்காக நடக்கிறோம், வேலைக்காக நடக்கிறோம்.. ராகுல் போட்ட மாஸ் டுவிட்.

பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனாவல்லா கூறுகையில் “ காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தும் நோக்கமே காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்க காந்தியை முன்நிறுத்தத்தான். ஒருபுறம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறேன் என்று நிதிஷ் குமார் களமிறங்கியுள்ளார். அவரும் 2024ம் ஆண்டு தேர்தலி்ல் பிரதமர் வேட்பாளருக்காக தயாராகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.


 

click me!