‘டீ’ விற்ற கடையை சுற்றுலா தளமாக்க ரூ.100 கோடி செலவு பண்ணும் மோடி? நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் மத்திய அரசு...

 
Published : Jul 03, 2017, 08:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
‘டீ’ விற்ற கடையை சுற்றுலா தளமாக்க ரூ.100 கோடி செலவு பண்ணும் மோடி? நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் மத்திய அரசு...

சுருக்கம்

Shop Where Modi Sold Tea to be Converted into a Tourist Spot

குஜராத் மாநிலம், வத்நகர் ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடி சிறுவயதில் டீ விற்பனை செய்த கடையை சுற்றுலா தளமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்த மோடி, தான் சிறுவயதில் தனது தந்தையுடன் சேர்ந்து வத்நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்தேன் என்று மக்களிடம் பேசினார். இதை நினைவு கூறும் விதத்தில் பிரதமர் மோடி டீ விற்பனை செய்தகடை பழமை மாறாமல், நவீனப்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், மேஹ்சனா மாவட்டத்தில் உள்ள இந்த வத்நகரில் பிரதமர் மோடி பிறந்து, வளர்ந்து இடம் என்பதால், இங்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவுச செய்துள்ளது.

மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா, கலாச்சார மற்றம் சுற்றுலாத்துறை , தொல்லியல்துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று முன்தினம் இந்த இடங்களை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

அப்போது, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், “ பிரதமர் மோடி சிறுவயதில் டீ விற்பனை செய்த தேநீர்கடை பழமை மாறாமல், அதே சமயம், புதுப்பிக்கப்படும். மோடியின் பிறந்த இடம் தவிர்த்து, இங்கு ஷர்மிஸ்தா ஏரியும் உள்ளது, சமீபத்தில் இங்கு புத்த துறவிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

வத்நகரில் உள்ள சிறிய ரெயில் நிலையத்தில் தான் பிரதமர் மோடி தனது வாழ்க்கையை தொடங்கினார். அந்த டீ கடையை மத்திய அரசு சுற்றுலாத்தளமாக மாற்ற உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வத்நகர், மோத்ஹிரா, பதன் ஆகிய சுற்றுலா தளங்களை ேமம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட உள்ளது’’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!