
ஆண்கள் விடுதிக்குள் பெண்கள், பெண்கள் விடுதிக்குள் ஆண்கள் அனுமதியின்றி நுழைவதை திரைப்படங்களில் பார்த்திருப்போம். சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு பெண்கள் விடுதிக்குள் ஆண்கள் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது இதற்கு நேர்மாறான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
வைரல் வீடியோவில் என்ன இருக்கிறது?
ஒரு இளைஞன் பெரிய சக்கர சூட்கேஸை எடுத்துக்கொண்டு விடுதிக்குள் வருகிறான். ஆனால் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களுக்கு எப்படித் தெரிந்ததோ என்னவோ? இளைஞன் கொண்டு வந்த சூட்கேஸை திறக்கச் சொன்னார்கள். சூட்கேஸை திறந்ததும், உள்ளே ஒரு பெண் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. இந்த சம்பவத்தை விடுதியில் இருந்த சிலர் தங்கள் மொபைலில் பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டது. மாணவர்கள் வீடியோ எடுப்பதை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்தனர்.
ஹாஸ்டலில் நடந்த சம்பவம்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சூட்கேஸில் இருப்பது மஞ்சள் சட்டை அணிந்த பெண் என்றும், அந்தப் பெண் அவரது காதலி என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். பாவம், அந்த பையனின் மாஸ்டர் பிளான் எல்லாம் தோல்வியடைந்தது. இருவரும் ரூமுக்கு போய் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ என்று நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.
நெட்டிசன்களுக்கு வந்த சந்தேகம்
வைரலாகி வரும் இந்த வீடியோ @TheSquind என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதுடன், நூற்றுக்கணக்கான கருத்துகளும் வந்துள்ளன. பையனின் நண்பர்களே விடுதி பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என்று சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் சூட்கேஸில் வந்த பெண் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரா அல்லது வேறு யாரா என்பது தெரியவில்லை. வைரலாகி வரும் வீடியோவில் அந்த பெண்ணின் முகம் தெளிவாக தெரியவில்லை. அந்த இளைஞன் மற்றும் பெண்ணின் அடையாளமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த ஜோடி மீது பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை. இன்று சூட்கேஸ் துணிகளை நிரப்புவதை விட வேறு வேலைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது. உங்கள் விடுதியில் பெரிய சூட்கேஸ் அடிக்கடி வெளியே சென்று வந்தால், அங்குள்ள ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கதவை பூட்ட மறந்த ஜோடி!
சமீபத்தில் ஒரு ஜோடி ஓயோ ரூமுக்கு வந்து கதவை பூட்ட மறந்துவிட்டது. இதை கவனித்த ஒருவர், சத்தமாக கத்தி கதவை பூட்டும்படி அறிவுரை கூறி இருவரின் மானத்தை காப்பாற்றினார். அந்த நபர் கத்தியதும், கட்டிலில் படுத்திருந்த இளைஞன் ஓடி வந்து சிரித்துக்கொண்டே கதவை பூட்டினான். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஓயோ ரூமுக்கு வந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய வேலையை ஜோடி மறந்துவிட்டது என்று கிண்டல் செய்தனர்.
பெட்ரோல் பங்க்கில் இத்தனை இலவச வசதிகள் இருக்கா? மறக்காம நோட் பண்ணுங்க!