அமெரிக்கப் பெண், ஆந்திரா இளைஞன்: ஹாய் என்று ஆரம்பித்து இன்ஸ்டாவில் மலர்ந்த காதல் கதை!

Published : Apr 10, 2025, 10:08 PM IST
அமெரிக்கப் பெண், ஆந்திரா இளைஞன்: ஹாய் என்று ஆரம்பித்து இன்ஸ்டாவில் மலர்ந்த காதல் கதை!

சுருக்கம்

US Woman Andhra Pradesh Man Love Story in Tamil : இன்ஸ்டாகிராம் மூலமாக அமெரிக்க பெண்ணுக்கு, ஆந்திராவைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையிலான மலர்ந்த காதல் கதையை இந்த பதிவு விவரிக்கிறது.

US Woman Andhra Man Love Story in Tamil : அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையில் மலர்ந்த நெகிழ்ச்சியான காதல் கதையை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். இதில், அவர்கள் பகிர்ந்த வீடியோ ஒன்றில் எப்படி இன்ஸ்டா மூலமாக இணைந்தார்கள், டேட்டிங் செய்த பிறகு எப்படி அவர்கள் காதல் கதை மலர்ந்தது என்பதை விரிவாக பகிர்ந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்லின் ஃபோரெரோ தனது இன்ஸ்டா பக்கத்தில் 14 மாதங்கள் ஒன்றாக இருந்த நிலையில் இப்போது காதல் திருமணத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனது காதலனை விட 9 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இருவரும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, பின்னர் வீடியோ காலில் பேச ஆரம்பித்தனர். மாதக்கணக்கில் ஆன்லைனில் காதலித்த பிறகு, இருவரும் நேரில் சந்தித்தனர். காதலுக்கு எல்லைகளோ, தேச வேறுபாடுகளோ, மொழியோ ஒரு தடையல்ல என்று சொல்வார்கள். இரண்டு நாடுகளில் இருந்து காதலித்து, திருமணம் செய்து கொள்வதற்காக எல்லை கடந்து வரும் காதலர்களின் கதைகளை நாம் கேட்டிருப்போம். அதேபோன்ற ஒரு காதல் கதைதான் அமெரிக்காவைச் சேர்ந்த இந்த பெண்ணுக்கும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞனுக்கும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜாக்லின் ஃபோரேரோவும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்தன் சிங் ராஜ்புத் தான் அந்த காதல் ஜோடிகள். விவாகரத்தான ஜாக்லினுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இன்ஸ்டாகிராமில் தான் அவள் சந்தனை சந்தித்தாள். சந்தனை விட ஒன்பது வயது மூத்தவள் ஜாஸ்லின். ஆனால், வயது அந்த உறவை நிராகரிக்க ஒரு தடையாக சந்தனுக்கு தோன்றவில்லை.

போட்டோகிராஃபர் ஜாக்லின் கடைசியில் ஆன்லைன் மூலம் 8 மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு சந்தனை பார்க்க அமெரிக்காவிலிருந்து நேராக இந்தியாவுக்கு பறந்து வந்துள்ளார். தங்கள் காதல் கதையை அவர்ள் தான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு இந்தியாவில் இருந்து சந்தனுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஜாக்லின் வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார்.

இருவரும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானாலும், பின்னர் அந்த உறவு வீடியோ காலுக்கு மாறியது. இறுதியில் மாதக்கணக்கில் ஆன்லைனில் காதலித்த பிறகு, இருவரும் முதல் முறையாக சந்தித்தனர். அந்த அழகான தருணங்களையும் வீடியோவில் காணலாம். சந்தன் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்றும், அது கிடைத்தவுடன் இருவரும் சேர்ந்து அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என்றும் வீடியோவில் கூறுகிறார். எப்படியிருந்தாலும், இந்த கியூட் ஜோடியையும் அவர்களின் காதல் கதையையும் நெட்டிசன்கள் விரும்புகிறார்கள் என்பது கமெண்டுகளில் இருந்து தெரிகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!