கொடையில் தமிழன அடிச்சிக்க முடியுமா!! ரூ.1161 கோடி அள்ளிக் கொடுத்த சிவ நாடார்.. தாராள மனம் படைத்தவர் பட்டம்

Published : Oct 21, 2022, 06:06 PM ISTUpdated : Oct 21, 2022, 06:15 PM IST
கொடையில் தமிழன அடிச்சிக்க முடியுமா!! ரூ.1161 கோடி அள்ளிக் கொடுத்த சிவ நாடார்.. தாராள மனம் படைத்தவர் பட்டம்

சுருக்கம்

இந்திய தொழிலதிபர்களிலேயே அதிகம் நன்கொடை  வழங்குபவர் களில் சிவ நாடார் முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் நாட்டிலேயே மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவராக என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

இந்திய தொழிலதிபர்களிலேயே அதிகம் நன்கொடை  வழங்குபவர் களில் சிவ நாடார் முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் நாட்டிலேயே மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவராக என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல் வெளியானது. அமெரிக்காவின் ஃபோர்பஸ்  இதழ் அந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில்  150 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி முதலிடத்தில் இருப்பதாகவும், ரிலையன்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானி 2வது இடத்தில் இருப்பதாகவும்  தகவல் வெளியானது. அப்பட்டியலில் தமிழரான சிவ நாடார் ஐந்தாவது இடத்தில்  இருப்பதாகவும் அந்த இதழ் தெரிவித்தது. இந்நிலையில் இந்திய தொழிலதிபர்கள் யார் அதிக அளவில் நன்கொடையும் வழங்குகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் நாட்டிலேயே பெரும் தொழிலதிபர்களில் அதிக நன்கொடை வழங்குபவராக சிவ நாடார் உள்ளார். நாட்டிலேயே  மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தில் நிறுவனர் அஸீம் பிரேம்ஜி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இந்த பட்டத்தை சிவநாடார் கைப்பற்றியுள்ளார்.

குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக பணம் ஈட்டுவது மட்டுமின்றி பல தொண்டு நிறுவனங்களின் வாயிலாக மக்களுக்கு பணத்தை செலவழித்தும் வருகின்றனர். இந்த வரிசையில் தான் சிவ நாடார் அதில் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள்:  புதுச்சேரி ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை.. முதலமைச்சர் ரங்கசாமி சொன்ன அதிரடி பதில்

யார் யார் இந்த பட்டியலில் இருக்கிறார்கள் என்பது விவரம் பின்வருமாறு:-  அதிக நன்கொடை வழங்கியவர்கள் சிவ நாடார் எச்சிஎல் ரூபாய் 1161 கோடி.

 அஸீம் பிரேம்ஜி விப்ரோ ரூபாய் 484 கோடி

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் 411 கோடி, 

 குமாரமங்கலம் பிர்லா ஆதித்யா பிர்லா ரூபாய் 242 கோடி, 

 சுஷ்மிதா சுப்ரதா பாக்ஸி  மைண்ட் ட்ரீ ரூபாய் 213 கோடி, 

 கௌதம் அதானி அதானி குழுமம் ரூபாய் 190 கோடி, 

 அனில் அகர்வால் வேதாந்தா ரூபாய் 165 கோடி, 

 நந்தன் நிலகேணி இன்ஃபோசிஸ் ரூபாய் 159 கோடி, 

 ஏ எம் நாயக் எல்&டி ரூபாய் 142 கோடி.

இதையும் படியுங்கள்: Rishi Sunak Next PM:பிரிட்டனின் அடுத்த பிரதமர் வாய்ப்பு இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு கிடைக்குமா?

இதேபோல அதிக நன்கொடை வழங்கிய பெண்கள் பட்டியலில் ரோகினி நிலகேணி ரூபாய் 120 கோடி, லீனா காந்தி திவாரி ரூபாய் 21கோடி, அனு ஆகா ரூபாய் 20 கோடி, வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிக்கு மேல்  15 பேரும்,  ஆண்டுக்கு  50 கோடிக்கு மேல் 20 பேரும்,  ஆண்டுக்கு 20 கோடிக்கு மேல் 43 பேரும், ஆண்டுக்கு 10 கோடிக்கு மேல் 80 பேரும், நன்கொடை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகம் நன்கொடை கொடுப்பவர்கள்  மும்பை, புதுடெல்லி, பெங்களூரு சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை