JP Nadda:ஜேபி நட்டா உயிரோடு இருக்கும்போதே தெலங்கானாவில் கல்லறை: பாஜக கொந்தளிப்பு

By Pothy Raj  |  First Published Oct 21, 2022, 2:21 PM IST

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உயிரோடு இருக்கும்போதே, அவர் புகைப்படத்தை வைத்து தெலங்கானாவில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.


பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உயிரோடு இருக்கும்போதே, அவர் புகைப்படத்தை வைத்து தெலங்கானாவில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.

தரம்தாழ்ந்த அரசியல் என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால், தங்களுக்கும், இந்த கல்லறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெலங்கானா  ராஷ்ட்ரிய சமிதி கட்சி தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

XBB ஓமைக்ரான் வைரஸ்: மீண்டும் கொரோனா அலை வரலாம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தெலங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடே சட்டப்பேரவைத் தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. முனுகோடேவில் ப்ளோரைடு ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு காலதாதமம் ஏற்படுவதைக் கண்டித்து முனுகோடோவில் நட்டாவுக்கு எதிராக இதை யாரோ செய்துள்ளனர். 

இந்த செயலைச் செய்தவர்கள் இதுவரை யார் எனத் தெரியவில்லை. சாலையின் நடுவே மண்ணால் எழுப்பப்பட்டு, அதில் ஒரு கம்பில் ஜேபிநட்டாவின் புகைப்படம் வைக்கப்பட்டு கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கல்லறையைச் சுற்றி மாலை அணிவிக்கப்பட்டு, மலர்கள் தூவப்பட்டுள்ளன. 

பட்டியலினம், பழங்குடி பிரிவு இடஒதுக்கீடு திடீர் அதிகரிப்பு: கர்நாடக அரசு அவசரச் சட்டம்

ஆந்திரபிரதேச பாஜக பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் ரெட்டி ட்விட்டரில் கூறுகையில் “ சகித்துக்கொள்ள முடியாத செயல். எங்களின் கட்சித் தலைவர் படத்தை கல்லறையில் வைத்த டிஆர்எஸ் தொண்டர்கள் செயல், அந்த கட்சியின் தரத்துக்கு கீழான செயல்” எனத் தெரிவித்தார்

தெலங்கானா பாஜக தலைவர் என்.வி.சுபாஷ் கூறுகையில் “ பூமியில் குழிதோண்டி கல்லறை வைத்து, அதில் ஜே.பி. நட்டாவின் புகைப்படத்தை வைத்தது முட்டாள்தனம். இதைக்கண்டிக்கிறோம், போலீஸில் புகாரும் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

யாத்தரி புவனகிரி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் நாராயன் ரெட்டி கூறுகையில் “ சமூக வலைத்தளம் மூலம்தான் இந்த வீடியோவை அறிந்தேன். இதுவரை யாரும் என்னிடம் புகார் அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்

டிஆர்ஸ் கட்சியினர் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என மறுத்துள்ளனர். நல்கொண்டா தொகுதி டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ பூபால ரெட்டி கூறுகையில் “ டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் இதுபோன்ற செயலை ஒருபோதும் செய்யமாட்டார்கள். பாதிக்கப்பட்ட பாஜக தொண்டர்கள் யாரேனும் இதை செய்திருக்கலாம், டிஆர்எஸ் கட்சியை புகார் கூறுகிறார்கள். டிஆர்எஸ் கட்சியினர் ஏன் இந்த காரியத்தை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை

பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில் “ இந்திய அரசியலில் தரம்தாழ்ந்த செயல். வினாஷ் காலே விபரீத புத்தி” எனப் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்த செயல் எங்களுக்கு வேதனையளிக்கிறது, அரசியலில் அவமானத்துக்குரிய செயல், தரம்தாழ்ந்த செயல்” எனத் தெரிவித்துள்ளார்

click me!