XBB variant: XBB ஓமைக்ரான் வைரஸ்: மீண்டும் கொரோனா அலை வரலாம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By Pothy RajFirst Published Oct 21, 2022, 12:56 PM IST
Highlights

ஓமைக்ரான் வைரஸின் திரிபு, எக்ஸ்பிபி(XBB) வைரஸால் பல்வேறு நாடுகளில் புதிய கொரோனா அலை உருவாகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் வல்லுநர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓமைக்ரான் வைரஸின் திரிபு, எக்ஸ்பிபி(XBB) வைரஸால் பல்வேறு நாடுகளில் புதிய கொரோனா அலை உருவாகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் வல்லுநர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு குறித்த ஆண்டுக் கூட்டம் நடந்தது. இதில் உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் வல்லுநர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: 

ஓமைக்ரான் வைரஸின் 300வகையான பிரிவுகள் உள்ளன. இதில் XBB எனும் வைரஸ்தான் மிகவும் ஆபத்தானதாகக் கருதுகிறோம். ஆனால், எந்த நாட்டிலும் இதுவரை இந்த வைரஸால் மோசமான பாதிப்பு ஏற்பட்டதாக எந்த புள்ளிவிவரமும் இ்லலை. இந்த எக்ஸ்பிபி வைரஸ், வைரஸ்களின் இணைசேர்வு கூட்டு. இதுபோன்றுமுன் உருவாகியுள்ளது. 

சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்குங்கள்... பல்கலை. மானியக்குழு உத்தரவு!!

இந்த எக்ஸ்பிபி வைரஸ் தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டால், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகளை அழித்துவிட்டு தீவிரமான பாதிப்பைத் தரும். ஆதலால் சில நாடுகளில் எக்ஸ்பிபி வைரஸால் மற்றொரு கொரோன அலை உருவாகலாம் .

ஓமைக்ரான் வைரஸின் பிஏ.5, மற்றும் பிஏ.1 ஆகிய வைரஸ்களையும் உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த வைரஸ்கள் வேகமாகப் பரவும் தன்மையும், நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கும் தன்மையும் கொண்டவை. ஆனால் ஒமைக்ரானில் உருவாகிய எக்ஸ்பிபி வைரஸ் பற்றி எந்த நாட்டில் இருந்தும் புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை.

ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை

நாங்கள் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், பல்வேறு நாடுகளில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் பல மாதங்களாகப் படிப்படியாகக் குறைந்துவிட்டது. ஆதலால் வைரஸின் உருமாற்றம் மற்றும் நகர்வு குறித்து தொடரந்து ஆய்வு செய்து வருகிறோம்

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் குறித்த சுகாதார அவசரநிலை விலக்கப்படவில்லை. ஏனென்றால், கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் குறையவில்லை, வாரத்துக்கு 8 ஆயிரம் முதல் 9ஆயிரம் உயிரிழப்புகள் இருந்து வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டதாக இதுவரை உலக சுகாதார அமைப்புகூறவில்லை. அப்படியென்றால், மக்கள் கொரோனா தொற்று வராமல் தடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதுதான். தடுப்பு அம்சங்கள் பல இருந்தாலும் அதில் முக்கியமானது தடுப்பூசி. 

பட்டியலினம், பழங்குடி பிரிவு இடஒதுக்கீடு திடீர் அதிகரிப்பு: கர்நாடக அரசு அவசரச் சட்டம்

முழுமையாக தடுப்பூசி டோஸ் என்பது 3 டோஸ்கள் செலுத்துவதாகும். ஆனால், உலகளவில் முதியோர்களில் பெரும்பாலனவர்கல் 3 டோஸ்கள் செலுத்தவில்லை. இந்தியாவில்கூட பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. 3வது டோஸ் தடுப்பூசி செலுத்துக்கொள்வதை சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. முக்ககவசம், கைகளைக் கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு வழிகளை தொடர்ந்து பின்பற்ற பரிந்துரைக்கிறோம்

இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்

click me!