ரத்தத்துக்குப் பதில் சாத்துக்குடி ஜூஸை உடலில் ஏற்றியதால் டெங்கு நோயாளி உயிரிழப்பு: உ.பி. அரசு விசாரணை

By Pothy Raj  |  First Published Oct 21, 2022, 11:27 AM IST

உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ்(அலகாபாத்) நகரில் டெங்கு நோயாளிக்கு ரத்த பிளாஸ்மா உடலில் ஏற்றுவதற்குப் பதிலாக சாத்துக்குடி சாற்றை உடலில் ஏற்றியதால் உயிரிழந்தார்.


உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ்(அலகாபாத்) நகரில் டெங்கு நோயாளிக்கு ரத்த பிளாஸ்மா உடலில் ஏற்றுவதற்குப் பதிலாக சாத்துக்குடி சாற்றை உடலில் ஏற்றியதால் உயிரிழந்தார்.

இந்த வீடியோ வைரலாகியதையடுத்து, உத்தரப்பிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பிரயாக்ராஜ் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் டெங்கு நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த பிளேட்லெட்டுகள் குறைந்ததால், உடனடியாக ரத்த பிளாஸ்மா தேவைப்பட்டது.  இதையடுத்து, உள்ளூர் ரத்த வங்கியை அணுகி ரத்த பிளாஸ்மா கேட்டுவாங்கப்பட்டது.

‘பாத்ரூமில் உங்கள அடைக்கலைணு சந்தோஷப்படுங்க’! சசி தரூரை கிண்டலடித்து கொம்புசீவும் பாஜக

ஆனால், ரத்த வங்கி வழங்கியது ரத்த பிளாஸ்மா என்று நம்பி நோயாளியின் உடலில் ஏற்றினர் ஆனால், ரத்த வங்கி ரத்த பிளாஸ்மாவுக்குப் பதிலாக சாத்துக்குடி சாறு இருந்ததால், அந்த நோயாளி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ஆனால் ரத்த வங்கி கொடுத்த பேக்கிங்கில் பிளாஸ்மா என்று எழுதப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

प्रयागराज में मानवता शर्मसार हो गयी।

एक परिवार ने आरोप लगाया है कि झलवा स्थित ग्लोबल हॉस्पिटल ने डेंगू के मरीज प्रदीप पांडेय को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा दिया।

मरीज की मौत हो गयी है।

इस प्रकरण की जाँच कर त्वरित कार्यवाही करें। pic.twitter.com/nOcnF3JcgP

— Vedank Singh (@VedankSingh)

கையால் நெய்யப்பட்ட பிரதமர் மோடி அணிந்த ஆடையின் சிறப்பு இதுதான்!!

இது குறித்து போலீஸ் ஐஜி ராகேஷ் சிங் கூறுகையில் “ இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். நோயாளிக்கு போலியான பிளாஸ்மா சப்ளை செய்யப்பட்டது எப்படி என விசாரித்து வருகிறோம், சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். உண்மையில் அது பிளாஸ்மாவா அல்லது சாத்துக்குடி ஜூஸை என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில் ஒருவர் பேசுகையில் “ நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை மருத்துவர்களுக்கும், ரத்த வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. உயிருக்காகப் போராடிய நோயாளிக்கு பிளாஸ்மாவுக்குப் பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரயாக்ராஜ் போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில் “ முதல்வர் அலுவலகத்தின் உத்தரவின்பெயரில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர், அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை  அளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்

click me!