5 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பெங்களூரு!!

By Narendran SFirst Published Oct 20, 2022, 9:16 PM IST
Highlights

பெங்களூரில் சுமார் 5 மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

பெங்களூரில் சுமார் 5 மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பெங்களூரில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 5 மணி நேரம் இடைவிடாது செய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. மேலும் சிவாஜி நகர், பானஸ்வாடி, பனசங்கரி, மாரத்தஹள்ளி, மடிவாளா, ஜெயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க: அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்... விருது பெற்றார் அமைச்சர் அன்பரசன்!!

மேலும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வெள்ள நீரால் சேதம் அடைந்ததோடு சில வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனிடையே சிவாஜி நகர் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் சிரமத்துடன் மீட்டனர். வணிக வளாகங்கள் குறிபாபாக மால்களில் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சேசாதிரிபுரம் என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளிசுவர் இடிந்து விழுந்ததில் ஏழு கார்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.

இதையும் படிங்க: பாகிஸ்தான், சீன எல்லைகளில் கொந்தளிப்பான சூழ்நிலை… கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை நாடியது இந்தியா!!

குட்ட ஹள்ளி என்ற பகுதியில் அதிகபட்சமாக 5.9 சென்டிமீட்டர் மழை நேற்று இரவு மட்டும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் நேற்று இரவு பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்களை வாங்க படை எடுத்து இருந்த நிலையில் கனமழையில் சிக்கி தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பெரும் இன்னலை சந்தித்தனர். பெங்களூரு நகரில் இந்த வருடம் சரித்திரம் காணாத மழை பதிவாகி வருகிறது. 2017 ஆம் ஆண்டு பெங்களூரு சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு 169 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

click me!