சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்குங்கள்... பல்கலை. மானியக்குழு உத்தரவு!!

By Narendran SFirst Published Oct 20, 2022, 5:09 PM IST
Highlights

இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை  தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு  உத்தரவிட்டுள்ளது. 

இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை  தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு  உத்தரவிட்டுள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவைக்கும் யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக  மானியக்குழு அமைப்புக்கே அதிகாரம் உள்ளது.

இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய என்சிபி பெண் எம்பி சுப்ரியா சுலே; அடுத்தது என்ன செய்தாருன்னு பாருங்க!!

இதுமட்டுமின்றி உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணிகளையும் யுஜிசி செய்து வருகிறது. இந்த நிலையில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக   அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: லட்சுமியை வழிபடாத முஸ்லிம்.. பணக்காரர் ஆகலயா.?? பாஜக எம்எல்ஏ நக்கல் பேச்சு.. உருவபொம்மை எரிப்பு.

அதில், இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதனை செயல்படுத்துவதற்குக் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகள் தொடங்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த பாடத்திட்டம் அதிக விழிப்புணர்வு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

click me!