போக்குவரத்து நெரிசலில் சிக்கிய என்சிபி பெண் எம்பி சுப்ரியா சுலே; அடுத்தது என்ன செய்தாருன்னு பாருங்க!!

By Dhanalakshmi GFirst Published Oct 20, 2022, 4:51 PM IST
Highlights

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் எம்பியுமான சுப்ரியா சுலே, புனேவின் ஹடாப்சரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். இதையடுத்து, போக்குவரத்தை சீர்செய்வதற்காக தனது காரில் இருந்து இறங்கினார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள சுப்ரியா சுலே,  “ஹடாப்சர் முதல் சாஸ்வாத் வரையிலான பால்கி நெடுஞ்சாலைக்கு அவசரமாக முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த ரோடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இங்கு தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்போது இங்கு ஒரு கார் நின்றால் கூட பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இதைப் பற்றி நேர்மறையாக சிந்தியுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

हडपसर ते सासवड या पालखी महामार्गाकडे तातडीने अगदी 'टॉप प्रायोरिटी'वर लक्ष देण्याची गरज आहे. या रस्त्याची प्रचंड अशी दुरवस्था झाली असून सातत्याने येथे वाहतूक कोंडी होते.आता तर अशी अवस्था आहे की येथे एक गाडी जरी बंद पडली तरी प्रचंड अशी वाहतूक कोंडी होते. pic.twitter.com/sRFfh4vn0s

— Supriya Sule (@supriya_sule)

கடந்த ஏழு நாட்களில், புனேயில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதுவும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

click me!