ஐயோ ஆண்டவா.. என்ன கொடுமை இது.. ஸ்மார்ட் போனுக்கு ஆசைப்பட்டு ரத்தம் விற்றக வந்த 12 ஆம் வகுப்பு மாணவி !!

By Ezhilarasan BabuFirst Published Oct 20, 2022, 2:02 PM IST
Highlights

ஸ்மார்ட் போனுக்கு ஆசைப்பட்டு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தனது ரத்தத்தை விற்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு ஆசைப்பட்டு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தனது ரத்தத்தை விற்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் ரத்தம் கொடுக்க வந்த மாணவியிடம் மருத்துவமனை ஊழியர்கள் விசாரித்ததில் இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு  கனவாக இருந்து வருகிறது. அதிலும் இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:  வெளுத்து வாங்கிய கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு.. மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..!

செல்போன் என்பது வாழ்க்கையில் ஒரு ஸ்டேட்டஸ் ஆக மாறியுள்ளது. செல்போன் வைத்திருப்பவர்கள் தங்களை அதிக ஸ்டைலாக காட்ட முடியும் என நம்புகின்றனர், இதற்காக பலர் பல வகைகளில் முயற்சிக்கின்றனர், பணம் உள்ளவர்கள் பல விதவிதமான செல்போன்களை வாங்கி  குதுகளிக்கின்றனர். பணம் இல்லாதவர்களை அதை பெற பல வகையில் உழைக்கின்றனர். ஆனால் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தனது ரத்தத்தை விற்க முயன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: கோயம்புத்தூரில் தங்க நகை பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டிகள் கொள்ளை; வைரல் வீடியோ!!

இது கேட்போரை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்புர் உள்ள  ஜபன் காவல் நிலையப்பகுதியில் கர்த்தாவில் வசிக்கும்  மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க  வேண்டும் என நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தார், அதற்காக ஆன்லைனில் 9 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்தார். ஆனால் அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்பதால் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சென்று பணத்திற்காக தனது ரத்தத்தை விற்க முடிவு செய்தார். அதேபோல மாவட்ட மருத்துவமனைக்கு சென்று ரத்தம் கொடுப்பதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கேட்டார்.

இதைக்கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர், இதனை அடுத்து ஊழியர்கள் குழந்தை பராமரிப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தெரிவித்த ரத்த வங்கி ஊழியர்  கனக்தாஸ், ரத்தக் கொடைக்கு பணம் கேட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது, இதையடுத்தே மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர், அவர்கள் வந்து விசாரித்த பிறகுதான் ஸ்மார்ட்போன் வாங்க பணம் இல்லாததால் ரத்தம் விற்பனை செய்ய வந்ததாக தெரிந்தது. சிறுமி கூறியதைக் கேட்டு மருத்துமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

விரைவில் போன் டெலிவரி செய்யப்படும், எனவே தன்னிடம் பணம் இல்லாததால் ரத்தம் கொடுக்க தான் வந்ததாக அந்த மாணவி தெரிவித்ததாக குழந்தைகள் பராமரிப்பு அமைப்பின் உறுப்பினர் ரீட்டா மஹ்தேவ் கூறினார். 
 

click me!