முகேஷ் அம்பானியை ஓரம்கட்டிய கௌதம் அதானி, இந்தியாவின் NO.1 பணக்காரர் ஆனார்.. 5வது இடத்தில் சிவ நாடார்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 20, 2022, 11:10 AM IST

இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கௌதம் அதானி முதலிடம் பெற்றுள்ளார்/ அவரின் நிகர சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில்  2022 ஆம் ஆண்டுக்கான பணக்காரர் பட்டியல்  தற்போது வெளியாகி உள்ளது. இதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்புகள் குறைந்ததற்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவே காரணம் எனத் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 88 பில்லியன் டாலர் ஆகும்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:  Mukesh Ambani: மீண்டும் துபாயில் ரூ. 1,353 கோடிக்கு வீடு வாங்கிய முகேஷ் அம்பானி!!

மேலும் இந்த பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10  இடங்களில் ராதாகிஷன் தமானி,  சைரஸ்பூன வல்லா, ஷிவ் நாடார், சாவித்ரி ஜிண்டால், தீலீப் ஷாங்வி, ஹிந்துஜா சகோதரர்கள், குமார் மங்கலம் பிர்லா மற்றும் பஜாஜ் குடும்பம் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்த பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பேர்களின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் சொத்து மதிப்பை அதானியும் அம்பானியுமே வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் 22.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தை ராதாகிஷன் தமானி பிடித்துள்ளார். நான்காவது இடத்தில் சைரஸ் பூனவல்லா உள்ளார் அவரின் சொத்து மதிப்பு 21.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஸ்பைஸ்ஜெட் பைலட்களுக்கு ஹாப்பி நியூஸ்... வெளியானது ஊதியம் குறித்த புதிய அறிவிப்பு!!

இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் தமிழரான சிவநாடார் 5வது இடத்தைப் பிடித்துள்ளார், 21.4  பில்லியன் டாலர் அவரது சொத்து மதிப்பு என கணக்கிடப்பட்டுள்ளது. 6வது இடத்தில் சாவித்திரி ஜிண்டால் உள்ளார்.  திலிப் சாங்வி 7-வது இடத்தையும்,  இந்துஜா சகோதரர்கள் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் புதிதாக 9 பேர் இடம் பிடித்துள்ளனர், இதில் புதிதாக நைகா நிறுவனத்தின் பல்குனி நாயர்  44 இடத்தைப் பிடித்துள்ளார். ரவி மோடி 50 ஆவது இடத்தை பிடித்துள்ளார், ரபிக் மாலிக் 89வது இடத்தையும் பிடித்துள்ளார். இவர்கள் மூவரும் பேஷன் துறையை சார்ந்தவர்கள் ஆவர், சமீபகாலமாக பேஷன் துறை மிக வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் நிறுவனத்தில் கோலோச்சும் ஆனந்த் மகேந்திரா 96வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல 100 பேர் கொண்ட ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்த ஆண்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர், பஜாஜ் குடும்பத் தலைவர் ராகுல் பஜாஜ் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். இதேபோல 2020 ஓர் ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து வெளியேறிய 4 பேர் மீண்டும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர், அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆட்டோ மொபைல் நிறுவனம் ஆனந்த் மஹிந்திரா ஆவார். இதேபோல Paytm நிறுவனத்தின் விஜய் சேகர் சர்மா தனது நிறுவனம் சந்தித்த மோசமான பங்கு சந்தை மூலமாக இந்தாண்டு பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார். 

குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை ஏஜென்சியில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என போபர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

click me!