இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஏற்கனவே துபாயில் விலை உயர்ந்த வீடு ஒன்றை வாங்கி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் ஒரு வீட்டை பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார். முன்பு வாங்கி இருந்த வீடு தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு என்று கூறப்பட்டு இருந்தது.
குவைத்தைச் சேர்ந்த 'அல்ஷாயா' குழுமத்தின் தலைவரான முகமது அல்ஷாயாவிடம் இருந்து கடந்த வாரம் வீடு வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வீட்டை ஏறக்குறைய 1,353 கோடி ரூபாய்க்கு 'பாம் ஜுமேரா தீவில்' வாங்கி இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் இன்றைய மிகப்பெரிய பணக்காரராக மட்டுமின்றி, பெரிய தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார் முகேஷ் அம்பானி. இவரது நிறுவனங்களின் இன்றைய சந்தை மதிப்பு 84 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார். மேற்கத்திய நாடுகளிலும் வீடுகளை வாங்கியுள்ளார். கடந்தாண்டு, பிரிட்டனில், ஸ்டோக் பார்க் கிளப்பை $79 மில்லியன் டாலர்களுக்கு ரிலையனஸ் வாங்கி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் நியூயார்க்கில் வீடு வாங்குவதற்கு தேடி வருகிறார் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
துபாயில் இருக்கும் இதே பாம் ஜுமேராவில் தீவில் தான் நடப்பாண்டின் துவக்கத்தில் தனது இளைய மகன் ஆனந்துக்காக வீடு வாங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த வீடு 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா, உட்புற, வெளிப்புற நீச்சல் குளங்கள் கொண்டது என்று கூறப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு 664 கோடி ரூபாய் எந்த தகவலும் வெளியாகி இருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டினர்தான். இவர்களில் சிலர் பல ஆண்டுகளாக பொருளாதாரத்தின் முக்கிய புள்ளிகளாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் உலகின் மிகப்பெரிய மால்கள் சிலவற்றில் சொத்து வாங்குகின்றனர். அல்லது ஷாப்பிங்கில் தங்களது பணத்தை செலவழிக்கின்றனர். இந்தியர்கள், குறிப்பாக, துபாய் ரியல் எஸ்டேட்டில் சொத்து குவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில், ஐக்கிய அரபு எமிரேட்டின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி.. ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்..