வெளுத்து வாங்கிய கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு.. மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..!

By vinoth kumarFirst Published Oct 20, 2022, 1:03 PM IST
Highlights

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த செப்டம்பரில் எதிர்பாராத வகையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழையால் நகரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், பெங்களூருவிற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த செப்டம்பரில் எதிர்பாராத வகையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஐடி ஊழியர் டிராக்டர் மூலம் அலுவலகம் சென்றனர். 

இதையும் படிங்க;- பட்டாசுகளை வாங்கினாலோ, வெடித்தாலோ 6 மாதம் சிறை... டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

இந்நிலையில், நேற்று முதல் பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், பெங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் பலர் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு இன்றி தவித்தனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மிதந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். 

குறிப்பாக பெங்களூருவில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வானிலை மையம் பெங்களூருவில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பெங்களூருவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மழை பெய்துள்ளது. 2022இல் இதுவரை மட்டும் 170.6 செமீ மழை பெங்களூருவில் மழை பொழிந்துள்ளது. 

இதையும் படிங்க;-  தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு போங்க.. உருவான இந்து Vs முஸ்லீம் சர்ச்சை - தெலங்கனாவில் பரபரப்பு

click me!