உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத், பத்ரிநாத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலில் இன்று சாமிதரிசனம் செய்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத், பத்ரிநாத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலில் இன்று சாமிதரிசனம் செய்தார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, உத்தரகாண்டுக்கு இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இதற்காக டேராடூனுக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் அஜெய் பாட் ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பின் அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். வெள்ளை நிறத்தில் பழங்குடிமக்கள் கையால் நெய்த பாரம்பரிய உடையை பிரதமர் மோடி அணிந்திருந்தார்.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சம்பா பெண்கள் கையால் நெய்த சோலா டோரா எனும் ஆடையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்திருந்தனர். இந்த ஆடையை குளிர்பிரதேசங்களில் அணிவதாக அந்தப் பெண்களிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி பிரதமர் மோடி அந்த ஆடையை இன்று அணிந்திருந்தார்.
शिव दिगम्बर भस्मधारी, अर्द्ध चन्द्र विभूषितम।
शीश गंगा कंठ फणिपति, जय केदार नमाम्यहम्॥
प्रधानमंत्री श्री ने बाबा केदारनाथ के दर्शन एवं पूजा अर्चना की।
जय-जय श्री केदार 🛕 pic.twitter.com/LOdtlsKHdP
குஜராத், உத்தரகண்ட் மற்றும் உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி... வெளியானது முழு பயண விவரம்!!
கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கேதார் பாபா கோயிலில் பூஜை செய்த பிரதமர் மோடி வழிபட்டார். இன்று பிற்பகல் பத்ரிநாத் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள கோயிலிலும் வழிபாடு நடத்த உள்ளார்.
கேதார்நாத்தில் உள்ள ஆதி குரு சங்கராச்சார்யா சமாதிக்கும் பிரதமர் மோடி சென்று வழிபாடு செய்ய உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். குறிப்பாக கவுரிகுந்த்-கேதார் இடையே ரோப்கார் திட்டத்துக்கு அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டுகிறார். அதன்பின் மணா கிராமத்தில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேச உள்ளார்.
காந்திநகரில் பாதுகாப்புத்துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
அரைவல் பிளாசா, மற்றும் ஏரிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இன்று இரவு பத்ரிநாத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.