கர்நாடகத்தில் பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகத்தில் பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு 3சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபின் சட்டத்துறை அமைச்சர் ஜே.சி. மதுசுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ மாநிலத்தில் பட்டியலினம் மற்றும் பழங்குயினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை, ஆளுநர் தவார்சந்த் கெலாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
அவர் ஒப்புதல் கிடைத்ததும் புதிய இடஒதுக்கீடு முறைக்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும். இந்த இடஒதுக்கீடு உயர்வால் பட்டியலினத்தில் உள்ள 103 சமூகத்தினரும், பழங்குடியினத்தில் உள்ள 56 சாதியினரும் பலன் அடைவார்கள். அமைச்சரவை முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சாதகமான முடிவு வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்
கையால் நெய்யப்பட்ட பிரதமர் மோடி அணிந்த ஆடையின் சிறப்பு இதுதான்!!
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹெச்என் நாகமோகன் தாஸ் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 15 முதல் 17% ஆகவும், பழங்குடியினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 3 முதல் 7 சவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இது தவிர 290 மொபைல் கால்நடை மருத்துவமனைகள் பல்வேறு மாவட்டங்களில் திறக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், விஜயபுராவில் ஸ்ரீ ஜெகஜோதி பசவேஸ்வரா விமானநிலையம் அமைக்க, ரூ.347.92 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயன்றுவருகிறது. அதேசமயம் பாஜகவும் ஆட்சியைத் தக்கவைக்க பல்வேறு யுத்திகளை வகுத்து வருகிறது.
ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை
கர்நாடகத்தின் தலித் வகுப்பைச் சேர்ந்த மல்லிகார்ஜூனகார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள நிலையில், மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை பாஜக அரசு உயர்த்தி தேர்தலுக்கான காயை நகர்த்தியுள்ளது.