"எதையும் சீரியஸா எடுத்துக்காதீங்க மோடி" - சசி தரூர், ஓ பிரையன் ‘செல்பி’ வௌியீடு!!

Asianet News Tamil  
Published : Jul 16, 2017, 03:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
"எதையும் சீரியஸா எடுத்துக்காதீங்க மோடி" -  சசி தரூர், ஓ பிரையன் ‘செல்பி’ வௌியீடு!!

சுருக்கம்

shasi tharoor brian selfie in twitter

கருத்து சுதந்திரத்தை மத்திய அரசு நசுக்கும் வகையில் செயல்படுவதைக் கண்டித்து,  காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் ஓ பிரையன் ஆகியோர் நாய் மூக்கு, காது வைத்து நேற்று செல்பி வௌியிட்டனர். 

பிரதமர் நரேந்திர மோடியின் முகம் மீது நாய் முகம், காது வைத்து கிண்டல் செய்த ஏ.ஐ.பி. நகைச்சுவை அமைப்பு மீது கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இதை வௌியிட்டுள்ளனர்.

சமீபத்தில், பிரதமர் மோடியின் தோற்றத்தில் இருக்கம் ஒருவர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த புகைப்படம் வௌியானது. அந்த புகைப்டத்தில் நாயின் மூக்கு, காதுகளை பொருத்தி, “நாய் ஊரைச் சுற்றி வருவதுபோல், மோடியும் நாடுகளைச் சுற்றி வருகிறார்’’ என்பதை வலியுறுத்தும் வகையில் அனைத்து இந்திய பக்சோட்(ஏ.ஐ.பி.) என்ற நகைச்சுவை அமைப்பினர் டுவிட்டரில் பதிவு வௌியிட்டனர். இதற்கு பா.ஜனதாவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அது நீக்கப்பட்டது. 



இந்நிலையில், மும்பை போலீசில் பா.ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர்கிரைம் போலீசார், ஏ.ஐ.பி. அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை பறிப்பதுபோல் நடக்கும் பா.ஜனதா அரசைக்க ண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். எம்.பி.யுமான சசிதரூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டேரீஸ் ஓ பிரையன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் தங்கள் முகத்தில் நாய் மூக்கு, காது பொருத்தி புகைப்படங்களை வௌியிட்டனர். 

டுவிட்டரில் கருத்து தெரிவித்த சசிதரூர், “ என் முகத்தில் நாயின் மூக்கு, காதுகளை பொருத்தி வௌியிட்டு சவால் விட்டுள்ளேன் என்னை கதை செய்யுங்கள். எதையும் விளையாட்டாக பாருங்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இதேபோல, ஓ பிரையன் ெவளியிட்ட டுவிட்டரில், “ இது நகைச்சுவைக்கான நேரம், இதை தீவிரமாக எடுக்காதீர்கள்’’ எனத் தெரிவித்து இருந்தார். 

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!