ரயில்வே துறையில் 66 ஆயிரம் வழக்குகள் நிலுவை - மத்திய சட்ட அமைச்சகம் பகீர் தகவல்

 
Published : Jul 16, 2017, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
ரயில்வே துறையில் 66 ஆயிரம் வழக்குகள் நிலுவை - மத்திய சட்ட அமைச்சகம் பகீர் தகவல்

சுருக்கம்

66000 cases pending in railway department

மத்திய அரசு துறைகளிலேயே, அதிகபட்சமாக ரெயில்வே துறையில் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரை,  66 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சேவை தொடர்பான வழக்குகள், தனியார் நிறுவனங்களுடன் ஏற்பட்ட வழக்குகள்,  இரு அரசு துறைகளுக்கு இடையிலான பிரச்சினைகள், இரு அரசு நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள் அரசு துறைகளில் நிலுவையில் உள்ளன.

மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின், சட்ட தகவல் மேலான்மை மற்றும் விளக்க முறை (எல்.ஐ.எம்.பி.எஸ்.) இணைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஜூன் மாதம் 12-ந்தேதியின்படி, ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அரசு துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக 369 அவமதிப்பு வழக்குகள் உள்ளன.

அதில் அதிகபட்சமாக ரெயில்வே துறையில் 66 ஆயிரத்து 685 வழக்குகள் உள்ளன. இதில் கடந்த 10 ஆண்டுகளாக 10 ஆயிரத்து 464 வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ரெயில்வே துறைக்கு அடுத்ததாக, நிதித்துறை அமைச்சகத்தில் 15 ஆயிரத்து 646 வழக்குகளும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு எதிராக 12 ஆயிரத்து 621 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

4-வது இடத்தில், உள்துறை அமைச்சகத்தில் 11 ஆயிரத்து 600 வழக்குகள் உள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாயத்து ராஜ் துறையில் 3 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளன.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்