அமர்நாத்தை துரத்தும் சோகம் - பேருந்து கவிழ்ந்து 11 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

Asianet News Tamil  
Published : Jul 16, 2017, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
அமர்நாத்தை துரத்தும் சோகம் - பேருந்து கவிழ்ந்து 11 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

சுருக்கம்

11 amarnath pilgrims died in accident

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நக்சலா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்த்து.

இதில், அமர்நாத் யாத்ரீகர்கள் 11 சம்பவ இட்த்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த 10 ஆம் தேதி அனந்தனாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற மீது தீவிர வாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!