ஏசியாநெட் கொச்சி அலுவலகம் மீது SFI தாக்குதல்... SFI மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாபு போலீசில் சரண்!!

Published : Mar 06, 2023, 05:17 PM IST
ஏசியாநெட் கொச்சி அலுவலகம் மீது SFI தாக்குதல்... SFI மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாபு போலீசில் சரண்!!

சுருக்கம்

ஏசியாநெட் நியூஸ் கொச்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய SFI மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாபு போலீஸில் சரணடைந்துள்ளார்.  

ஏசியாநெட் நியூஸ் கொச்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய SFI மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாபு போலீஸில் சரணடைந்துள்ளார். முன்னதாக ஏசியாநெட் கடந்த நவ.10 அன்று போதைப்பொருள் ஒரு டர்ட்டி பிசினஸ் என்ற தலைப்பில் ஒரு செய்தியை ஒளிபரப்பியது. இதையடுத்து அந்த சேனல் தவறான செய்திகளை வெளியிடுவதாக எம்எல்ஏ புகார் அளித்தார். இதனிடையே கொச்சியில் உள்ள ஏசியாநெட் அலுவலகத்திற்குள் நுழைந்து எஸ்.எஃப்.ஐ. தாக்குதல் நடத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஏசியாநெட்டின் கொச்சி அலுவலகம் மீது தாக்குதல் மற்றும் SFI-யின் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் SFI போராட்டம் நடத்துவது ஏன் என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதையும் படிங்க: இந்தியாவை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய விவகாரம்: சுவிஸ் தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்தியா

இதேபோல் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஹசனும்  SFI-க்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது அறிக்கையில், கோழிக்கோடு அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டு, ஊடகங்களின் வாயை அடைக்கும் அரசின் திட்டம் என்று தெரிவித்துள்ளார். இதுக்குறித்து ஏசியாநெட்டின் நிர்வாக ஆசிரியர் சூர்யகுமார் கூறுகையில், எந்த வகையான விசாரணைக்கும் ஒத்துழைக்க ஏசியாநெட் தயாராக உள்ளது. அறிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் மாஃபியாவின் வலிமையின் கதை இது. இந்த அறிக்கையின் மூலம் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் புத்தக புரட்சி.. “நூலக கிராமம்”..! வீட்டுக்கு வீடு நூலகம் அமைக்கும் இளைஞர் சிராஜுதின் கான்

இந்த போராட்டம் போதை மருந்து மாஃபியாவுக்கு எதிரானது, இது சமுதாய நலன். அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை ஒடுக்க நினைக்கிறது. எம்.எல்.ஏ.வின் புகாரின் அடிப்படையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஏசியாநெட் முழு விஷயத்திலும் தனது நிலைப்பாட்டை தெளிவாக வைத்துள்ளது. அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஜனநாயக மரபு அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏசியாநெட் நியூஸ் கொச்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய SFI மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாபு போலீஸில் சரணடைந்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!