திடீரென கவிழ்ந்த பள்ளி பேருந்து.. ஆய்வு சுற்றுலாவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபரீதம் !!

Published : Dec 21, 2022, 06:41 PM IST
திடீரென கவிழ்ந்த பள்ளி பேருந்து.. ஆய்வு சுற்றுலாவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபரீதம் !!

சுருக்கம்

மணிப்பூரின் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் என்ற இடத்திற்கு வருடாந்திர பள்ளி ஆய்வுச் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி, குறைந்தது 15 மாணவர்கள் இறந்திருக்கலாம் என்றும்,  பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க..டிசம்பர் 24 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

லாங்சாய் துபுங் கிராமத்திற்கு அருகில் பிஷ்ணுபூர் - கூப்பும் சாலையில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் இம்பாலில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 22 மாணவர்கள் அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி எடப்பாடி தான்.. ஓங்கி அடித்த ஓபிஎஸ் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!