ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் மட்டும்தான் கோவிட் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டுமா, கர்நாடகத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக நடத்தும் பேரணிக்கு கிடையாதா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் மட்டும்தான் கோவிட் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டுமா, கர்நாடகத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக நடத்தும் பேரணிக்கு கிடையாதா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் கொரோனா வேகமெடுத்துள்ளதால், இந்தியாவிலும் மீண்டும் கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்போது இருந்தே மத்தியஅரசு கொரோனா தடுப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
கோவிட் ரூல்ஸ் முக்கியம் அல்லது யாத்திரையை நிறுத்துங்கள்:ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்
மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா விதிகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே கடிதம்மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணம் செல்லும் போது, ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பார்கள். அவ்வாறு பங்கேற்கும்போது அங்கு கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு நெருக்கமாக செல்வார்கள்.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியிருந்தார். அதில் “ கோவிட் பாதுகாப்பு விதிகளை உங்கள் பாரத் ஜோடோ யாத்திரையில் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால், யாத்திரையை சிறிதுகாலம் ஒத்திவையுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
எங்களுக்கு வியப்பாக இருக்கிறது, காங்கிரஸ் கட்சி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை குறிவைத்து மட்டும் மத்திய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ராஜஸ்தானில் பாஜக தலைவர் சதிஷ் பூனியா ஜனகுரோஷ் யாத்திரை நடத்துகிறார்அவருக்கு ஏன் கோவிட் விதிகளை பின்பற்றுங்கள் எனக் கடிதம் அனுப்பவில்லை. சதீஷ் நடத்தும் யாத்திரையில் மக்கள் கூட்டம் இல்லை, மக்களுக்கும் ஆதரிக்கவில்லை என்பதால் எங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டதா
பாரத் ஜோடோ யாத்திரைக்கு தேசம் முழுவதும் பெரியஅளவில் ஆதரவு கிடைத்துள்ளது, மக்கள் ஆர்வத்துடன் வந்து பங்கேற்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஒரு யாத்திரை நடத்துகிறது, அங்கு கோவிட் விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது பற்றி கடிதம் அனுபப்பட்டதா. கர்நாடக பாஜகவுக்கு மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பினாரா என்பது தெரிய வேண்டும்.
இன்று நீங்கள் விமானப் பயணம், ரயில் பயணம், பேருந்தில் பயணித்தாலும்யாரும் முகக்கவசம் அணிவதில்லை, சானிடைசர் பயன்படுத்துவதில்லை. பொதுப்போக்குவரத்தில் கடுமையான கொரோனா விதிகளை ஏன் மத்திய அரசு பின்பற்றவில்லை.
ஏன் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ்கட்சிக்கும், பாரத் ஜோடோ யாத்திரைக்கும் மட்டும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பார்களா, அல்லது நாடாளுமன்றம் தொடர்ந்து நடக்கதானே செய்கிறது.
டெல்லியில் ரயிலை எண்ணும் வேலையாம்! தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரூ.2.60 கோடி மோசடி
நாடாளுமன்றத்தில் எம்.பி.கள் பங்கேற்கும்போது, ஜனகுரோஷ் யாத்திரை நடக்கும், கர்நாடகத்தில் பாஜக யாத்திரை நடக்கும்போது, விமானப் பயணத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை என்றநிலையில் ஏன் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மட்டும் கட்டுப்பாடு வருகிறது
மத்திய அரசு உடனடியாக கொரோனா கட்டுப்பாடு விதிகளை அறிவிக்கட்டும், அந்த விதிகளை நாங்கள் பின்பற்றத் தயராக இருக்கிறோம்.
இவ்வாறு பவன் கேரா தெரிவித்தார்