Rahul Gandhi:கோவிட் ரூல்ஸ் முக்கியம் அல்லது யாத்திரையை நிறுத்துங்கள்:ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்

By Pothy RajFirst Published Dec 21, 2022, 10:51 AM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் பாரத் ஜோடோ நடைபயணத்தைத் தொடங்கினார். இதுவரை 100 நாட்களுக்கு மேல் நடந்துள்ள ராகுல் காந்தி, தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து இன்று முதல் ஹரியானா மாநிலத்துக்குள் பிரவேசித்துள்ளார்.

டெல்லியில் ரயிலை எண்ணும் வேலையாம்! தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரூ.2.60 கோடி மோசடி

அடுத்ததாக வரும் 24ம் தேதி முதல்டெல்லியில் ராகுல் காந்தி நடைபயணம் செய்ய உள்ளார். ராகுல் காந்தி செல்லும் நடைபயணத்தில் மாநிலம் தோறும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பங்கேற்று நடக்கிறார்கள். 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி முடிகிறது?

ஆனால், தற்போது சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் கொரோனா வேகமெடுத்துள்ளதால், இந்தியாவிலும் மீண்டும் கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்போது இருந்தே மத்தியஅரசு கொரோனா தடுப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா விதிகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே கடிதம்மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சூழலில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணம் செல்லும் போது, ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பார்கள்.அவ்வாறு பங்கேற்கும்போது அங்கு கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு நெருக்கமாக செல்வார்கள்.

இதைநினைவுப் படுத்தி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரம் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “ ராஜஸ்தானைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், எனக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் உலகளவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இது உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது ஆதலால், கொரோனா விதிகளை கடைபிடிக்க வலியுறுத்துங்கள் எனத் தெரிவித்திருந்தார்கள். 

ஆதலால் நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், பாரத் ஜோடோ நடைபயணத்தில் கொரோனா தடுப்பு விதிகளைக் கடைபிடியுங்கள், முகக்கவசம் அணியுங்கள், சானிடைசர் பயன்படுத்தி, சமூகவிலகலைக் கடைபிடியுங்கள், தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதியுங்கள்

கொரோனா தடுப்பு விதிகளைக் கடைபிடிக்க முடியாவிட்டால், மக்களின் உடல்நலத்தின் மீதும், கொரோனா பெருந்தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்காகவும், நீங்கள் பாரத் ஜோடோ யாத்திரையை ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த எம்.பிக்கள், 3 பேர் கையொப்பமிட்ட கடிதத்தையும் மத்திய அமைச்சர் இணைத்துள்ளார். இதற்கிடையே இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுவிட்ட வந்தபின், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

click me!