கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்... அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Dec 21, 2022, 12:16 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. BF 7 எனப்படும் வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது. தற்போதைய மாறுபாட்டிற்கு உட்பட்ட வைரசால் நோய்வாய்ப்பட்ட ஒருவர், சராசரியாக 16 பேருக்கு நோயை பரப்புவதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் ஜிடிபிக்கு 10,000 கோடி பங்களித்த யூடியூபர்கள்.. லட்சக்கணக்கில் உருவான வேலைவாய்ப்புகள் !!

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மது விற்பனையில் தமிழ்நாட்டுக்கே டஃப் கொடுத்த கேரளா.. தமிழ்நாட்டின் சாதனையை முறியடித்தார்களா ?

அதன் எதிரொலியாக இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னமும் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

click me!