நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே வரும் 23ம் தேதி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே வரும் 23ம் தேதி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 29ம் தேதிவரை கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டநிலையில் 6 நாட்களுக்கு முன்பாகவே கூட்டத்தொடர் முடிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது
மக்களவை அலுவல்ஆலோசனைக் குழு தலைவர் ஓம் பிர்லா தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளிர்காலக் கூட்டத் தொடர்கடந்த 7ம் தேதி தொடங்கியது, வரும் 29ம் தேதிவரை நடத்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், 23ம் தேதியே முடிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால், கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள், மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது