Wilful Defaulter:தகுதியிருந்தும் கடனைச் செலுத்தாத டாப்50 நபர்கள் மட்டும் ரூ.93 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு பாக்கி

By Pothy Raj  |  First Published Dec 20, 2022, 12:46 PM IST

தகுதியிருந்தும் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் டாப்-50 நபர்கள் மட்டும் வங்கிக்கு ரூ.92ஆயிரத்து 570 கோடி தர வேண்டியுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.


தகுதியிருந்தும் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் டாப்-50 நபர்கள் மட்டும் வங்கிக்கு ரூ.92ஆயிரத்து 570 கோடி தர வேண்டியுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் பிரிட்டனுக்கு தப்பிஓடிய கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெகுல் சோக்ஸி அதிகபட்சமாக ரூ.7,848 கோடி தர வேண்டியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பகவத் காரத் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:

பாதாளத்தில் பாய்ந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழ்ச்சி! என்ன காரணம்?

2022, மார்ச் மாதம்வரை, கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியிருந்தும் கடன் செலுத்தாத டாப்-50 நபர்கள் மட்டும் வங்கிகளுக்கு ரூ.92ஆயிரத்து 570 கோடி தர வேண்டும். 

இதில் அதிகபட்சமாக கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் அதிபர் மெகுல் சோக்ஸி ரூ.7,848 கோடி தர வேண்டும். எரா இன்ப்ரா எஞ்சினியரிங்(ரூ.5,879 கோடி), ரீ அக்ரோ(ரூ.4,803 கோடி), கான்கேஸ்ட் ஸ்டீல் அன்ட் பவர்(ரூ.4,596 கோடி), ஏபிஜி ஷிப்யார்டு(ரூ.3,708), ப்ராஸ்ட் இன்டர்நேஷனல்(ரூ.3,311 கோடி), வின்சம் டைமண்ட் அன்ட் ஜீவல்லரி(ரூ.2,931), ரோட்டோமேக் குளோபல்(ரூ.2,893கோடி), கோஸ்டல் ப்ராஜெக்ட் (ரூ.2,311 கோடி), ஜூம் டெவலப்பர்ஸ்(ரூ.2,147 கோடி) தர வேண்டும்.

கடனை திருப்பிச் செலுத்தாத நபர்கள் மீண்டும் வங்கியில் கடன் பெற அனுமதிக்கப்படவில்லை. 5 ஆண்டுகளுக்கு எந்த நிறுவனத்தையும் புதிதாகத் தொடங்கினாலும் கடன் தரக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை சட்டவளையத்துக்குள்மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

பணம் கொட்டும் தொழில்.! குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சூப்பர் தொழில் !

இது மட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.10 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. 

2021-22ம் ஆண்டில் ரூ.19,666 கோடி கடனை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்தது, அதைத் தொடர்ந்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.19,484 கோடியைத் தள்ளுபடி செய்தது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.18,312 கோடியும், பேங்க் ஆப் பரோடா வங்கி ரூ.17,967 கோடியும் தள்ளுபடி செய்தன. பேங்க் ஆப் இந்தியா ரூ.10,443 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.10,148 கோடியும், ஹெச்டிஎப்சி வங்கி ரூ.9,405 கோடியும் தள்ளுபடி செய்தன. ஆக்சிஸ் வங்கி ரூ.9126 கோடியும், இந்தியன் வங்கி ரூ.8,347 கோடியும், கனரா வங்கி ரூ.8,120 கோடியும் தள்ளுபடி செய்துள்ளன. 

இவ்வாறு பகவத் காரத்  தெரிவித்தார்

click me!