தாஜ்மஹால் கட்டப்பட்டு 370 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக குடிநீர் வரி, சொத்துவரியாக ரூ.5 கோடி செலுத்தக் கோரி ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தாஜ்மஹால் கட்டப்பட்டு 370 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக குடிநீர் வரி, சொத்துவரியாக ரூ.5 கோடி செலுத்தக் கோரி ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கீழ் வரும் நினைவுச்சின்னங்கள் மத்திய,மாநில அரசின் வரிவிலக்குப் பட்டியலில் வரும் என்பதுகூடத் தெரியாமல் ஆக்ரா மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தாஜ்மஹால் மட்டுமல்ல ஆக்ரோ செங்கோட்டைக்குக்கும் சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆக்ரோ கோட்டைக்குமட்டும் சொத்துவரி, குடிநீர் வரியாக ரூ.1 கோடி நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது நகராட்சி நிர்வாகம்
தகுதியிருந்தும் கடனைச் செலுத்தாத டாப்50 நபர்கள் மட்டும் ரூ.93 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு பாக்கி
ஆக்ரா தொல்பொருள் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் ராஜ் குமார் படேல் செய்திசேனலிடம் கூறுகையில் “ இதுவரை தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை ஆகியவற்றுக்கு குடிநீர், சொத்துவரி செலுத்தக் கோரி 3 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.5 கோடி வரி உள்ளதாகத் தெரிவித்துள்ளது நிர்வாகம். ஆனால், மத்தியஅரசின் சட்டப்படி நினைவுச்சின்னங்கள், தொல்பொருட்கள் ஆய்வகங்களுக்கு வரி விலக்கு உண்டு, வரி விதிப்பின் கீழ் வராது என்பது தெரியவில்லை.
நினைவுச்சின்னங்களுக்கு சொத்துவரி, வீட்டுவரி விதிக்க முடியாது. உத்தரப்பிரதேசச் சட்டத்தில் கூட வரிவிதிக்கும் சரத்து ஏதும்இல்லை. மற்ற மாநிலங்களிலும் இல்லை. குடிநீர் வரியைப் பொறுத்தவரை இதற்கு முன் அவ்வாறு வரி செலுத்தக் கோரி எந்த நோட்டீஸும் வந்தது இல்லை. ஏனென்றால், எந்தவிதமான குடிநீர் இணைப்பும், வர்த்தகரீதியான பயன்பாட்டுக்கு இல்லை. தாஜ்மஹால் என்பது மக்கள் வந்து செல்லும் இடம், இதில் வர்த்தகப் பயன்பாட்டுக்கு வழியில்லை.
நாய் என்ற சொல்! காங்கிரஸ்-பாஜக இடையே கடும் வாக்குவாதம்: மக்களவை ஒத்திவைப்பு
ஆக்ரா கோட்டை யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் உள்ளது. ஏறக்குறைய 370 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டைக்கும் வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆக்ரோ கன்டோன்மென்ட்டுக்கு பதில் அனுப்பியுள்ளோம், அதில் நினைவுச்சின்னங்கள் மத்திய, மாநிலஅ ரசின் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவை, இந்த இடங்களுக்கு வரி வசூலிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளோம்.
நினைவுச் சின்னங்களுக்கு யார் உத்தரவின்படி வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது, எந்தஅதிகாரி கையொப்பத்தின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம என்று ஆக்ரா நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.