மது விற்பனையில் தமிழ்நாட்டுக்கே டஃப் கொடுத்த கேரளா.. தமிழ்நாட்டின் சாதனையை முறியடித்தார்களா ?

By Raghupati RFirst Published Dec 20, 2022, 9:32 PM IST
Highlights

உலகக் கோப்பை நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சராசரி விற்பனையை விட, மது விற்பனை அதிகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக மது விற்பனை 30 கோடியாக இருந்தாலும், கால்பந்து போதையில் மது விற்பனை அதிகமாக உள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் ஓணம், விஷு, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. கத்தாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியை கேரளாவில் உள்ள ரசிகர்கள் பலரும் மதுக்களை வாங்கி குவித்துள்ளனர்.

கேரளாவில் உள்ள பெவ்கோ நிறுவனம் மூலம் ரூ.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், கால்பந்து போட்டி நடந்த இறுதி நாளில் வருமானம் 49 கோடியே 88 லட்சம். இது எப்போதும் இல்லாத சாதனை ஆகும். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டின் 250 கோடி வசூலை நெருங்க முடியாது என்பதே உண்மை.

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

click me!