டெல்லி ரயில் நிலையத்துக்கு தினசரி வந்து செல்லும் ரயில்களை எண்ணும் வேலை தரப்போகிறோம் என்று கூறி தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரூ.2.60 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி ரயில் நிலையத்துக்கு தினசரி வந்து செல்லும் ரயில்களை எண்ணும் வேலை தரப்போகிறோம் என்று கூறி தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரூ.2.60 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் வேலை வாங்கித் தருவதாகவும், கிளார்க் பணி வாங்கித் தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் ஒரு கும்பல் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது.
மது விற்பனையில் தமிழ்நாட்டுக்கே டஃப் கொடுத்த கேரளா.. தமிழ்நாட்டின் சாதனையை முறியடித்தார்களா ?
ரயில்வேயில் வேலைசெய்து ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த எம்.சுப்புசாமி என்பவர்தான் முதலில் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி டெல்லியில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி அழைத்துச்சென்றுள்ளார். ஆனால், அவரும் ஏமாற்றப்பட்டுள்ள விவரம் தெரிந்தபின் இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பாக சுப்புசாமி புகார் அளித்ததைத் தொடர்ந்து ரயில்வே போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இதை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றினர். அந்தப் புகாரில் “ ஹைதராபாத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவரைச் சந்தித்தாகவும், அவருக்கு டெல்லியில் எம்.பிக்கள், அமைச்சர்கள் நன்கு அறிமுகம் என்பதால், இளைஞர்களுக்கு வேலைவாங்கித் தருவதாகத் தெரிவித்தார் அதை நம்பி பணம் கொடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் ஜிடிபிக்கு 10,000 கோடி பங்களித்த யூடியூபர்கள்.. லட்சக்கணக்கில் உருவான வேலைவாய்ப்புகள் !!
வடக்கு ரயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறிக்கொண்டு சிவராமனும் அவரின் உதவியாளர்களும், ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ.33 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதில் பணத்தை இழந்த சதீஸ் என்ற இளைஞருக்கு ஒரு மாதம் டெல்லியில் பயிற்சி அளிப்பதாகக் கூறி அழைக்கப்பட்டிருந்தார்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் சதீஸ் என்பவருக்கு டெல்லியில் ரயில்நிலையத்தில் தினசரி எத்தனை ரயில்கள் வந்து செல்கின்றன என்று கணக்கெடுக்கும் பயிற்சியை மோசடி கும்பலைச் சேர்ந்த விகாஸ் ரானா என்பவர் அளித்துள்ளார். ஒரு மாதம் இந்த பயிற்சியை முடித்தபின், சதீஸுக்கு போலியாக சான்றிதழையும் ராணா வழங்கியுள்ளார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் ரூ.27 லட்சத்தை பறிகொடுத்துள்ளார், அவருக்கும் டெல்லியில் பயிற்சியும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலையும், சான்றிதழும் தருவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்த இளைஞர்களின் நண்பர்களும் நம்பி 25 பேர் வேலைக்காக பணம் கொடுத்துஏமாந்தனர்.
370 ஆண்டுகளில் முதல்முறை! தாஜ்மஹாலுக்கு ரூ.5 கோடிக்கு சொத்துவரி குடிநீர் வரி கேட்ட உ.பி. அரசு
இதில் முதன்முதலில் சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்ற இளைஞர்களையும் அழைத்துச் சென்று அந்த மோசடி கும்பலை சந்திக்க வைத்துள்ளனர். அவ்வாறு வந்த இளைஞர்களுக்து டெல்லி கன்னாட் பேலஸ் பகுதியில் போலியாக மருத்துவப் பரிசோதனையும், சான்றிதழ்சரிபார்ப்பும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்குப்பின் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை மோசடி கும்பலைச் சேர்ந்த விகாஸ் ராணா, துபே, விகாஸ் ராணாவின் உதவியாளர்ஆகியோர் பரோடா ஹவுஸுக்கு அழைத்துச் சென்று பயிற்சிக்கான புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை போலியாக வழங்கி, பயிற்சியில் சேர்ந்ததற்கான உத்தரவு நகல்களையும் போலியாக வழங்கியுள்ளனர்.
இதில் 12 இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரயில்நிலையத்தில் ரயில்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மோசடி கும்பலைத் தொடர்ந்து கொண்டபோது அவர்கள் செல்போனை எடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ஏமாற்றப்பட்டுவிட்டோம், கடினமாக சேர்த்தபணத்தை தொலைத்துவிட்டோம் எனக் கூறி போலீஸில் புகார்அளித்துள்ளனர். இதையடுத்து, மோசடி மற்றும் ஏமாற்றுதல் பிரிவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்