Covid 19 India: கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை! அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

By Pothy RajFirst Published Dec 21, 2022, 2:48 PM IST
Highlights

கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் இருந்து வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் இருந்து வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சீனா, அமெரிக்கா, தென் கொரியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. இதில் சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் உயிரிழப்பும் சேர்ந்துள்ளது. இதனால், ஆபத்தான கட்டத்தை நோக்கி சீனா நகர்ந்து வருகிறது. தினசரி லட்சக்கணக்கானோரும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும் சீனாவில் நிகழ்ந்து வருகிறது.

ஏன் எங்களுக்கு மட்டும்?பாஜக பேரணி நடத்துவது தெரியலையா? மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் கேள்வி

இதனால், கொரோனா பரவல் மீண்டும் எழுகிறதா என்ற கவலையில் உள்ளனர். மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க முடியாது என்பதால், உலக நாடுகள் கொரோனா தடுப்பு வழிகளை கடைபிடிக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் ஏறக்குறைய குறைந்துவிட்டாலும், சீனாவில் பரவிவரும் கொரோனா இந்தியாவிலும் வந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு விழிப்பாக இருக்கிறது.

இதற்காக கொரோனா தடுப்பு வழிமுறைகளை மாநிலங்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும், தடுப்பு விதிகளை பின்பற்றி கூட்டங்களை நடத்த வேண்டும், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என மத்தியஅ ரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கோவிட் ரூல்ஸ் முக்கியம் அல்லது யாத்திரையை நிறுத்துங்கள்:ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மாநில அரசுகள் அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து மரபணுப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். உருமாறிய கொரோனா வைரஸ் இருக்கும்பட்சத்தி்ல் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து கொரோனா சூழல் குறித்து ஆலோசனா நடத்தினோம்.

கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கல், துறைகள் விழிப்புடன் இருக்க வேண்டும், கண்காணிப்பை தீவிரப்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்தச் சூழலையும் எதிர்கொள்ள, சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்”எ னத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்... அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை, மருந்துத்துறை, பயோடெக்னாலாஜி பிரிவு அதிகாரிகள், ஆயுஷ் துறை, ஐசிஎம்ஆர் இயக்குநர் ராஜிவ் பால், நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் மருத்துவர் டி.கே.பால், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பஆலோசனைக் குழு தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

click me!