
வங்கிகளில் இன்று முதியோர்களுக்கு மட்டும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படும் என இந்திய வங்கிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து வங்கிகளிலும் ரூபாய் நோட்டுகளை மாற்ற கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக, இன்று, முதியோர்கள் மட்டும் அனைத்து வங்கிகளிலும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய வங்கிகள் சம்மேளன தலைவர் திரு. ராஜீவ் ரிஷி தெரிவித்துள்ளார். மேலும், வங்கிகளின் வேலைநேரத்தில் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் திங்கட்கிழமை முதல், பொதுமக்கள், பழைய ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் திரு. ராஜீவ் ரிஷி தெரிவித்துள்ளார்.