
4 தொகுதிகளில் இன்று நடக்கும் இடைத் தேர்தலில், மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கின்றனர்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடை தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணி முதல் அனைத்து தொகுதியிலும் வாக்காளர்கள், ஆர்வமுடன் வாக்களிக்க சென்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை, தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுத்தனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க கேமரா மூலம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் கண்காணிக்கப்படுகிறது.