
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் என்ற இடத்தில் நடந்த அந்த சம்பவத்தில், ஜாதவ் என்பவர் தனது போனை பறிக்க முயன்றபோது, பயணி ஜாஹித் ஜைதி தனது போனில் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். இதை குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கும் வகையில், அவர் எடுத்த அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். வைரலான வீடியோவை பார்த்த கல்யாண் ரயில்வே போலீசார் ஜாதவை கைது செய்தனர்.
"செவ்வாய்கிழமை, தானேயில் அவருக்கு எதிராக முன் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை நாங்கள் கைது செய்தோம். அவரிடமிருந்து மேலும் ஒரு மொபைல் போனை மீட்டோம்," என்று ரயில்வே போலீஸ் அதிகாரி பண்டரிநாத் காண்டே கூறினார், பின்னர் அவர்கள் அவரிடம் மொபைல் எங்கிருந்து கிடைத்தது என்று விசாரித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!
செல்போனை "சுவிட்ச் ஆன்" செய்தபோது, அது புனேவை சேர்ந்த பிரபாஸ் பாங்கே என்பவருடையது என்பது தெரியவந்தது. திரு. பாங்கே ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். ஹோலி பண்டிகைக்காக புனேவில் இருந்து தனது வீட்டிற்கு பயணம் செய்துள்ளார். கடந்த மார்ச் 25ம் தேதி நள்ளிரவில் விட்டல்வாடி ரயில் நிலையத்தில் மீண்டும் புனே சென்று கொண்டிருந்த போது ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஆனால் அவர் எப்படி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இறந்தார் என்பது மர்மமாகவே இருந்தது, ஆனால் அந்த ஜாதவை விசாரித்தபோது தான், தன்னிடம் இருந்து போனை பறிக்க முயன்ற ஜாதவை பிடிக்கப்போகும்போது தான் அந்த நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். "அவர் கல்யாணில் இருந்து புனேவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.
விட்டல்வாடி ஸ்டேஷனில், ஜாதவ் அவரது தொலைபேசியைப் பறித்துக்கொண்டார். அவரது மொபைல் போனை திரும்பப் பெற, திரு பாங்கே ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றபோது அவர் இறந்துவிட்டார்," என்று போலீசார் தெரிவித்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது: ஐ.நா சபை கருத்து!