நாடாளுமன்ற தாக்குதலின் 22-வது நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறலால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
நாடாளுமன்ற மக்களவையில் இன்று இருவர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர் திடீரென அவைக்கு குதித்து, மேஜை மீது ஓடி உள்ளனர். உள்ளே நுழைந்த இருவரும் தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பிய மேஜையில் தாவி குதித்து தப்பிக்க முயன்ற இருவரையும் எம்.பிக்களே மடக்கி பிடித்து அவைக்காவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் வந்திருந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் அவையில் இல்லை. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக பிரதமர் ராய்ப்பூர் சென்றிருந்த நிலையில் மக்களவை இந்த சம்பவம் நடந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவைக்கு வந்த சில நிமிடங்களில் இந்த சம்பவம் அரங்கேற்கி உள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் புகை குண்டுகளை திறந்ததால் மக்களவையில் மஞ்சள் நிற புகை எழுந்ததாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மக்களவை பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடி உள்ளன. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இதுகுறித்து பேசிய போது “திடீரென்று 20 வயதுடைய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து சபைக்குள் குதித்து கையில் குப்பிகளை வைத்திருந்தனர். இந்த குப்பிகள் மஞ்சள் புகையை உமிழ்ந்தன. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். சில கோஷங்களை எழுப்பியது. புகை விஷமாக இருந்திருக்கலாம். இது 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13 அன்று ஒரு கடுமையான பாதுகாப்பு மீறலாகும்.” என்று தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ககோலி தஸ்திதர் இதுகுறித்து பேசிய போது "எனக்குத் தெரியாது, இரண்டு நபர்கள் கேலரியில் இருந்து குதித்தனர். அவர்கள் கோஷங்களை எழுப்பினர், மேலும் சில வாயுக்களை வீசினர்," என்று தெரிவித்தார்.
parliament attack நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவரால் பரபரப்பு; 4 பேர் கைது!
நாடாளுமன்ற தாக்குதலின் 22-வது நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறலால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2001-ம் ஆண்டு இதே டிசம்பர் 13ஆம் தேதி இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது.
22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நாளில் நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இன்று உள்ளேயே தாக்குதல் என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்திய பின்னரே இந்த அத்துமீறல் சம்பவத்தின் நோக்கம், பின்னணி குறித்த விவரங்கள் தெரியவரும்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் வெளிநபர்கள் யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே செல்ல முடியாது. 4 கட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுவார்கள். எனவே பலத்த பாதுகாப்பை மீறி இவர்கள் எப்படி உள்ளே சென்றனர் என்று எம்.பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.