New Parliament Building: புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்: பணிகளை விரைந்து முடிக்கத் தீவிரம்

By Pothy RajFirst Published Dec 31, 2022, 12:06 PM IST
Highlights

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி புதிய நாடாளுமன்றத்தில் நடக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி புதிய நாடாளுமன்றத்தில் நடக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய நாடாளுமன்றத்தை பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் திறக்க வேண்டும் என்பதால் பணிகள் அனைத்தும் முழுவீச்சில், தீவரமாக நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தற்போதுள்ள நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமையானது. இதற்கு பதிலாக புதிய நாடாளுமன்றத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்து, இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்றம் 2022ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிந்துவிடும்விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடவுள் ராமர், இந்துத்துவா பாஜகவுக்கு மட்டுமே உரிமையானது அல்ல! உமா பாரதி பேச்சு

ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இதனால் குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட புதிய நாடாளுமன்றத்தில் நடத்த முடியாமல் போனது. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய நாடாளுமன்றத்தின் பணிகளை இரவுபகலாக செய்யவும், வேலையை விரைந்து முடிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது

இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி, பழைய நாடாளுமன்றத்திலும், 2ம்பகுதி புதிய நாடாளுமன்றத்திலும் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, இந்தப் பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிந்துவிடும், மார்ச் மாதத்தில் திறக்கப்படும். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம்பகுதியை புதிய நாடாளுமன்றத்தில் நடத்தலாம்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 30 அல்லது 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டும் அதைத் தொடர்ந்து ஒருவாரம் வரை முதல் அமர்வு நடக்கும். அதன்பின் மார்ச் மாதத்தில் 2வது அமர்வு பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்.

Rewind 2022: 2022ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஓர் பார்வை

இந்த 2வது அமர்வு புதிய நாடாளுமன்றத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் இரு அவை எம்.பி.க்கள் அமரும் அவை, எம்.பிக்கள் ஓய்வு அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கு தனி அறைகள், வாகன நிறுத்துமிடம் என ஏாராளமான வசதிகள் இருக்கும்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டுமானப்  பணிகளை நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி நேரடியாக கண்காணித்து வருகிறார்” எனத் தெரிவித்தன

click me!