Rewind 2022: 2022ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஓர் பார்வை

By Pothy RajFirst Published Dec 30, 2022, 11:02 PM IST
Highlights

2022ம் ஆண்டு முடிந்து 2023ம் ஆண்டை வரவேற்கக் காத்திருக்கிறோம். புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் முன் கடந்த காலத்தை அசைபோடுவது நம் கடந்து வந்த பாதையை திருப்பிப்பார்ப்பதற்கு சமமாகும். 

2022ம் ஆண்டு முடிந்து 2023ம் ஆண்டை வரவேற்கக் காத்திருக்கிறோம். புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் முன் கடந்த காலத்தை அசைபோடுவது நம் கடந்து வந்த பாதையை திருப்பிப்பார்ப்பதற்கு சமமாகும். 

2022ம் ஆண்டில் மனதை உடைக்கும் உயிரிழப்புகள், மகிழ்ச்சித் தருணங்கள், சாதனைகள், சோகங்கள், கோபத்தை வரவழைத்த சம்பவங்கள், திருப்புமுனைகள் என பல நடந்துள்ளன. இந்த 2022ம் ஆண்டு சிலருக்கு மனதில் நீங்கா மகிழ்ச்சியான தருணங்களையும், சிலருக்கு ஆறாத வடுக்களையும், காயத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். அந்த சம்பவங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம். 

ஜனவரி 

ஜனவரி 1, 2022
ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் சாமி கும்பிடச் சென்றபோது 3-ம் நுழைவுவாயிலில் இரு தரப்பு பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 12 பக்தர்கள் பலியானார்கள், 16 பேர் காயமடைந்தனர்

பிப்ரவரி

பிப்ரவரி -14
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

லீவில் இருக்கும் ஊழியரை தொந்தரவு செய்யக்கூடாது.. மீறினால் 1 லட்சம் அபராதம் - ட்ரீம் 11 நிறுவனம் அதிரடி

மார்ச்

மார்ச் -9 
ஹரியானா மாநிலம், சிர்சாவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவாலா மாவட்டத்தில் உள்ள மியான் சானு பகுதியில் விழுந்தது. 

மார்ச் -10
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை கீழே இறக்கி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது

ஏப்ரல்

ஏப்ரல் -10
மத்தியப்பிரதேசம், குஜராத்,ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் ராம நவமி பண்டிகையின்போது இரு தரப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது வகுப்புக் கலவரமாகி இந்த 4 மாநிலங்களிலும் பெரிய அளவுக்கு வன்முறை ஏற்பட்டது.

மே 

மே-16
காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும்,மூத்த தலைவராகவும் இருந்த கபில் சிபல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

மே 27
முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபர் ஷர்மா தனியார் சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது, பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது

ஜூன்-13
நேஷனல் ஹெரால்ட் வழக்குத் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விசாரிக்க அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்

ஜூன்-16
ராணுவத்தில் வீரர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் பெரும் கலவரம், போராட்டம் வெடித்தது. 

சுதந்திர இந்தியாவின் பொற்காலம்.. இளைஞர்களுடன் உரையாடிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

ஜூன்

ஜூன்-25
2022-குஜராத் கலவரம் தொடர்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்பி. ஸ்ரீகுமார், சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

ஜூலை-5
மகாராஷ்டிரா அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 45 எம்எல்ஏக்களுடன் தனியாகப் பிரிந்து பாஜகவுடன் சேர்ந்தார். இதனால் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி சேர்ந்த அமைத்த மகாவிகாஸ்அகாதி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்று, சட்டப்பேரவையில் பாஜக ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்

ஜூலை

ஜூலை 25
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதி ஏற்றார். 
குஜராத்தில் போடாட் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட்-9 
பீகாரிலும் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் திடீரென பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். தனது கட்சியை கலைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டி நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதால் ஆட்சி கவிழந்தது. 

ஆகஸ்ட்-10
பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழந்து,  காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி ஆதரவில் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சி அமைத்தார்

ஆகஸ்ட் 26
காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மனக்கசப்பு காரணமாக, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் 50 ஆண்டுகால காங்கிரஸ் உறவை முறித்துக்கொண்டு, அந்தக் கட்சியிலிருந்து விலகினார். 

செப்டம்பர்

செப்டம்பர் -2
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை கொச்சியிலிருந்து பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

செப்டம்பர்-7
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,751 கி.மீ தொலைவுக்கு பாரத் ஜோடோ நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணத்தில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து 150 நாட்கள் ராகுல் காந்தி நடக்க உள்ளார்.

From the India Gate: அமித் ஷாவை பார்த்தால் தெரியாது...ஆனால் அமைதியாக பஞ்சாயத்து செய்துவிடுவாராம்!!

செப்டம்பர் -22
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளது, நிதியுதவி அளிக்கிறது என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து, 16 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி 106 பேரைக் கைது செய்தது.

செப்டம்பர் 28
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறது, தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தில் தலைவர்களாக இருந்தவர்கள்தான் பிஎப்ஐ அமைப்பிலும் உள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

செப்டம்பர் 29
இந்திய முப்படைகளின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக லெப்டினல் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டார்.

அக்டோபர்

அக்டோபர் 1
இந்தியாவில் முதல்முறையாக 13 நகரங்களில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நடந்த வர்த்தகக் கண்காட்சியில் தொடங்கி வைத்தார். 

அக்டோபர் -17
காங்கிஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடுமுழுவதும் உட்கட்சித் தேர்தல் நடந்தது. முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் பெல்லாரி நகரில் வாக்களித்தார். அப்போது கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி பங்கேற்றிருந்தார்.

அக்டோபர்-19
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்  பதவிக்காக நடந்த தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் தோல்வி அடைந்தார். 24 ஆண்டுகளுக்குப்பின் சோனியா காந்தி குடும்பத்தைச் சேராதவர் தலைவராகினார்.

அக்டோபர் -30
குஜராத்தில் உள்ள மோர்பி நகரில் மச்சுச்சு ஆற்றின் குறுக்கே இரும்பு கயிற்றால் தொங்குபாலம் அமைக்கப்பட்டிருந்தது. தீபாபவளிப் பண்டிகை விடுமுறையில் இருந்த மக்கள் கூட்டமாக அந்த பாலத்தை கடக்க முயன்றபோது பாலம் அறுந்து கீழே விழுந்ததில் 131 பேர் உயிரிழந்தார்கள், 180க்கும் மேற்பட்டோர் காயமைடைந்தனர்.

நவம்பர்

நவம்பர் -9 
2023ம் ஆண்டு ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவராக இந்தியா பொறுப்பேற்கிறது. இதற்கான இலட்சினையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

நவம்பர்-11
பெங்களூரூ நகருக்கு 2வது சர்வதேச விமானநிலையம் டெர்மினல்-2 பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடா சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தனர். பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து தங்களையும் விடுதலைச் செய்யக்கோரி 6 பேரும் தாக்கல் செய்த மனுவை ஏற்று விடுதலை செய்ய நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

நவம்பர் -12
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. 

நவம்பர் -18
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-3 இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

நவம்பர்-20
மங்களூருவில் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட குக்கர் வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. குக்கர் குண்டுவை முகமது ஷபிக் என்பவர் எடுத்துச் சென்றார்.

டிசம்பர் 

டிசம்பர் 1 குஜராத் சட்டசபைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு

டிசம்பர் 5 குஜராச் சட்டசபைத் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு

டிசம்பர் 8 குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை. இதில் இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப்பிடித்தது. குஜராத்தில் பாஜக 7வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது.
டிசம்பர் 9: அருணாச்சலப்பிரதேசம், சீனா எல்லையில் உள்ள தவாங் பகுதியில் இந்தியஎல்லைக்குள் அத்துமீற முயன்ற சீன ராணுவவீரர்களை இந்திய வீரர்கள் தடுத்தபோது மோதல் ஏற்பட்டது.இதில் இரு தரப்புக்கும் காயம் ஏற்பட்டது, உயிரிழப்பு ஏதும் இல்லை.

டிசம்பர் 12: மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா, அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க பிரதமர் மோடியைக் கொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்காக அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை முதல் இலங்கை நகரின் யாழ்ப்பாணம் இடையே 3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இமாச்சலப்பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவி ஏற்றுக்கொண்டார்.

டிசம்பர் 15: பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்த 36 ரஃபேல் போர்விமானங்களில் கடைசி விமானம் இந்தியாவந்து சேர்ந்தது. 

டிசம்பர் 16: அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. 

டிசம்பர் 17: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானுவை கூட்டுப்பலாத்காரம் செய்து, குடும்பத்தை கொலை செய்த 11 பேரை விடுவிப்பது குறித்து குஜராத் அரசு முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பீகாரில் மதுகுடிக்க தடை அமலில் இருக்கும்போது அங்கு கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர் 30: பிரதமர் நரே்ந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மரணம்

 

click me!