கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் பொன்னான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவுக்கு முக்கிய காலகட்டம் இது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கேரளா மாநிலத்தில் தாமரச்சேரி மாவட்டத்துக்குச் சென்று இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களுடன் உரையாடிய போது பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் பொன்னான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவுக்கு முக்கிய காலகட்டம் இது. நமது வரலாற்றில் மிகவும் நிகழ்வுகள் நிறைந்த காலகட்டங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம், ஆசாதி கா அமிர்தா மஹோத்சவ் என நாம் கொண்டாடி வருகிறோம்.
இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!
புதிய இந்தியா ? என்றால் என்ன ? புதிய இந்தியாவுக்கான பொருள் என்ன ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நான் முன்பே கூறியது போல், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாமல் போகலாம். ஆனால் உங்கள் பெற்றோரோ அல்லது அவர்களது பெற்றோரோ முடியும்.
இந்தியாவைப் பற்றிய கதை என்ன ? சர்வதேச மன்றங்களிலும், மற்ற நாடுகளிலும் இந்தியாவைப் பற்றி என்ன பேசப்படுகிறது. இதுதான் முக்கிய வேறுபாடு என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சுமார் ஆயிரம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சருடன் உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா