பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு புத்தத் துறவி தலாய் லாமா இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று, வெள்ளிக்கிழமை, அதிகாலையில் காலமானார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், புத்த மதத் தலைவர் தலாய் லாமா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறி கடிதம் எழுதியுள்ளார்.
"நான் இப்போது புத்த கயாவில் இருக்கிறேன். உங்கள் தாயாருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
"உங்கள் தாயார் 99 வயது வரை நலமுடன் வாழ்ந்திருக்கிறார். நீங்கள் இந்த மகத்தான நாட்டுக்கே பிரதமராகும் நிலைக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் பெருமிதம் அடைந்திருப்பார்" என்றும் தலாய் லாமா தனது இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு