Uma Bharti: கடவுள் ராமர், இந்துத்துவா பாஜகவுக்கு மட்டுமே உரிமையானது அல்ல! உமா பாரதி பேச்சு

By Pothy RajFirst Published Dec 31, 2022, 10:22 AM IST
Highlights

கடவுள் ராமர், இந்துமதம் ஆகியவை பாஜகவுக்கு மட்டும் உரிமையானது அல்ல, காப்புரிமையும் பெறவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

கடவுள் ராமர், இந்துமதம் ஆகியவை பாஜகவுக்கு மட்டும் உரிமையானது அல்ல, காப்புரிமையும் பெறவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் உமா பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

லீவில் இருக்கும் ஊழியரை தொந்தரவு செய்யக்கூடாது.. மீறினால் 1 லட்சம் அபராதம் - ட்ரீம் 11 நிறுவனம் அதிரடி

இந்துமதம், இந்துத்துவா மற்றும் கடவுள் ராமர் ஆகியவற்றுக்கு பாஜக காப்புரிமை ஏதும் பெறவில்லை, அது பாஜகவுக்கு மட்டும் உரிமையானது அல்ல. கடவுள் ராமர், அனுமன், இந்து மதத்தின் மீது யார் வேண்டுமானாலும் பற்று வைக்கலாம், நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் நாங்கள் வைத்திருக்கும், எங்கள் கட்சி வைத்திருக்கும் நம்பிக்கை அரசியல் ஆதாயம் கடந்தது. 

ராமர், தேசியக் கொடி, கங்கை நதி மற்றும் பசு ஆகியவை மீது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது பாஜக அல்ல. இது இயல்பாகவே எனக்குள் ஏற்கனவே இருக்கிறது.

கடவுள் ராமர், அனுமன், இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம், நம்பிக்கை வைக்கலாம். இவற்றுக்கு பாஜக ஏதும் காப்புரிமை பெறவில்லை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். பாஜக என்ன கட்டளையிடுகிறதோ, என்ன கோடு போடுகிறதோ அதை மட்டுமே செய்வேன்.

பாகிஸ்தானில் பெண் கொடூர கொலை.. இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - பரபரப்பு சம்பவம்

இந்த பாரத தேசம் சிதறுண்டு கிடக்கிறதா. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி அரசுதான் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 பிரிவை ரத்து செய்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் தேசத்தை பிளக்கிறது. ராகுல் காந்தி யாத்திரை செல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீரில் செல்ல வேண்டும்.

2023ம் ஆண்டு மத்தியப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய், படுதோல்வி அடையும்

இவ்வாறுஉமா பாரதி தெரிவித்தார்


 

click me!