எஸ்.டி.பி.ஐ. தேசியத் தலைவர் ஃபைஸி கைது! எதற்காக? எந்த வழக்கில் தெரியுமா?

Published : Mar 06, 2025, 01:50 PM IST
  எஸ்.டி.பி.ஐ. தேசியத் தலைவர் ஃபைஸி கைது! எதற்காக? எந்த வழக்கில் தெரியுமா?

சுருக்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் (PFI) தொடர்பு இருப்பதாக SDPI தலைவர் ஃபைஸி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) இன் சித்தாந்தத்தையும் நோக்கங்களையும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், அதிலிருந்து நிதி உதவி பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 55 வயதான ஃபைஸி மார்ச் 03 இரவு 9:30 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 28 அன்று நிதி புலனாய்வு நிறுவனம் அவரது கேரள வீட்டில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: பணமோசடி வழக்கில் மொய்தீன் ஃபைஸியை கைது செய்த அமலாக்கத்துறை

பின்னர் ஃபைஸி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அதிகாலையில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை   அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பான சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளில் ஃபைசி ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்த பிறகு, அமலாக்கத்துறை ஏற்கனவே ரூ.56.56 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. பல்வேறு PFI அறக்கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களில் உள்ள 35 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: SDPI தொடர்புடைய 14 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் சட்டவிரோதமாக நிதி திரட்டுவதன் மூலம் PFI பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியதாகக் கூறி, அந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பில் நிதி தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி SDPI தலைவர்  ஃபைஸி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!