ஜன.26 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு... கொரோனாவை தடுக்க அதிரடி நடவடிக்கை!!

Published : Jan 03, 2022, 04:40 PM ISTUpdated : Jan 03, 2022, 05:40 PM IST
ஜன.26 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு... கொரோனாவை தடுக்க அதிரடி நடவடிக்கை!!

சுருக்கம்

கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் வரும் 26 ஆம் தேதிவரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் வரும் 26 ஆம் தேதிவரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவாவில் புதிதாக 338 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவாவில் ஏற்கனவே இருந்ததை விட தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,671 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகரிப்பால், புதிய கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றை மாநில அரசு விதித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகக் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பல்வேறு மாநில மக்கள் வரத் தொடங்கினர்.

கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தினத்தன்று பல்வேறு இடங்களிலும் மக்கள் கொரோனா அச்சமின்றி, கூட்டம், கூட்டமாகச் சேர்ந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கொண்டாடினர். புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குப் பின் கொரோனா பாதிப்பு மக்களுக்குத் தெரியத் தொடங்கியுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுக்குறித்து கோவா மாநில கோவிட் தடுப்புக் குழு உறுப்பினர் சேகர் சால்கர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடைபெறும். 11 மாற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தடுப்பூசி செலுத்தினாலும் பள்ளிக்கு வரத் தேவையில்லை. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

கொரோனா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று 5 சதவீதம் வரும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும். கடற்கரை, பப்புகள், கிளப்புகள் போன்றவற்றில் கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே மும்பையிலிருந்து புத்தாண்டு கொண்டாட கோவா வந்த சொகுசுக் கப்பலில் இருந்த 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சொகுசு கப்பலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கார்டிலியா க்ரூஸ் என்ற கப்பலின் பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தக் கப்பலில் இருந்த பயணிகளைத் தரையிறங்க கோவா அரசு அனுமதிக்கவில்லை. இதில் 1,471 பயணிகள், 595 ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முடிந்து விட்டது. முடிவு கிடைத்தபின் கப்பலில் உள்ள பயணிகள் தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. தற்போது 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கப்பல் மர்ம கோவாவில் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Bank Holiday : செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறப்பு! செப்.28 முதல் 3 நாள் என்ன நடக்கும்?
8th Pay Commission: Minimum Pay ரூ.69,000.! HRA 40%.! அக்டோபர் 7, 8ல் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகுமா?