இமாலய உயரத்தை எட்டிய எல்லுசுவாமி… யார் இந்த சாமி? எந்த ஊருனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவிங்க!!

Published : Jan 01, 2022, 07:19 PM IST
இமாலய உயரத்தை எட்டிய எல்லுசுவாமி… யார் இந்த சாமி? எந்த ஊருனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவிங்க!!

சுருக்கம்

டெஸ்லா நிறுவனத்தில் கிண்டியில் படித்த இளைஞர் இயக்குநர் ஆனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

டெஸ்லா நிறுவனத்தில் கிண்டியில் படித்த இளைஞர் இயக்குநர் ஆனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருப்பதுண்டு. ஒருகாலத்தில் இந்தியர்களுக்கு எட்டா கனியாக இருந்த நிலையில், தற்போது உலக அளவில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அந்த வகையில் டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக மாறியுள்ளது. இந்த நிலையில் கிண்டியில் படித்த இளைஞர் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி என்பவர், கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் முடித்தார். படிப்பு முடிந்த பிறகு WABCO வாகன கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் வோக்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் கூடத்தில் பணியாற்றி உள்ளார்.

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவுக்கான பணியாட்களை தேர்வு செய்ய இருப்பதாக எலான் மஸ்க் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதில் பல நாடுகளில் இருந்து பலரும் விண்ணப்பித்தனர்.

அதில் அசோக் எல்லுசுவாமியும் ஒருவர். அவரும் விண்ணபித்த நிலையில் அசோக் தேர்வானார். விண்ணப்பத்தவர்களில் முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டவர் அசோக் எல்லுசுவாமி தான். இதை அடுத்து டெஸ்லாவில் மென்பொருள் வல்லுனராக அசோக் எல்லுசுவாமி பணிக்கு சேர்ந்துள்ளார். அசோக் எல்லுசுவாமியை தனது நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்க உள்ளது என நான் ட்வீட் செய்திருந்தேன். அந்த ட்வீட் மூலம் முதன் முதலில் ஆட்டோ பைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டது அசோக் தான் என தெரிவித்திருந்தார். டெஸ்லாவில் மென்பொருள் வல்லுனராக அசோக் எல்லுசுவாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது நிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!