கொரோனாவுக்கு தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்துங்கள்... மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

Published : Jan 01, 2022, 06:41 PM IST
கொரோனாவுக்கு தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்துங்கள்... மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

சுருக்கம்

கொரோனாவை கட்டுப்படுத்த தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து தினசரி தொற்றும் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. கர்நாடகாவில் 66 பேரும், ஆந்திராவில் 16 பேரும், அரியானாவில் 12 பேரும் ஒமைக்ரான் தாக்குதலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரானை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பாதித்த 1,270 பேரில் 374 பேர் குணமடைந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சீரான உடல்நலத்துடன் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது ஒருபுறம் அதிகரிக்கும் நிலையில் மற்றோரு புறம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவில் கடந்த 70 நாட்களில் இல்லாத அளவு தினசரி தொற்று 16,764 ஆக பதிவாகியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தினசரி தொற்றின் வேகம் அதிகரிப்பது வைரஸின் அதிவேக பரவல் தன்மையை காட்டுகிறது.

இதனால் இந்தியாவில் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்கள் தேவைக்கேற்ப தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாகும்போது ஆரம்ப சிகிச்சையை வீட்டில் இருந்தே பெறும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!