
பொதுவாக ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள், கவுண்டர்களில் நின்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான பயணிகள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி-யில் தான் தங்களுடைய டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வருகின்றனர்.
போலி குறுஞ்செய்திகள் மற்றும் லிங்க்
டிக்கெட் புக் செய்யும் பயணிகள் தங்களுடைய கணினி மூலம் நேரடியாக ஐஆர சிடிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று புக் செய்வார்கள். அல்லது ஐஆர்சிடிசி செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். ஆகையால் இந்த செயலியினை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்பவர்களை அங்கீகரிக்கப்பட்ட கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டும் அதை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் நோ-பால் போட்டால் நாங்கள் சதம் அடிப்போம்! பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி!
ஐஆர்சிடிசி இல் இருந்து வருவதாக கூறி வரும் சில போலி எஸ்எம்எஸ் மற்றும் லிங்குகளை தயவு செய்து கிளிக் செய்யவவோ அல்லது அதற்கு ரிப்ளை செய்யவோ வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி, பயனர்கள் யாரேனும் மோசடியில் சிக்கினால் உடனடியாக Care@irctc.co.in என்ற முகவரிக்கு சென்று புகாரை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அளவில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படும் இந்த நேரத்தில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகையால் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன்பு எந்த செயலியை பயன்படுத்தி, அல்லது எந்த இணையதளத்தில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்கிறோம் என்பதை மிக கவனமாக சரிபார்க்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே கூறுகிறது.
அதிகாரப்பூர்வமாக உள்ள இணையதளம் மற்றும் செயலிகளை தவிர பிற இணையதளங்கள் மற்றும் செயல்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம் என்றும் ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.